திசையன்விளையில் 20 வழக்குகளில் தொடர்புடைய `கஞ்சா' ராணி மீண்டும் கைது

20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திசையன்விளையில் 20 வழக்குகளில் தொடர்புடைய `கஞ்சா' ராணி மீண்டும் கைது
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மனைவி செல்வராணி (வயது 57). இவர் சம்பவத்தன்று திசையன்விளை பொம்மிநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற திசையன்விளை இன்ஸ்பெக்டர் சீதா லெட்சுமி தலைமையிலான போலீசார் செல்வராணியை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான செல்வராணி மீது கஞ்சா வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் அடிக்கடி கைதாகி உள்ள செல்வராணி, தற்போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக தனது இருப்பிடத்தை தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகருக்கு மாற்றிவிட்டார்.

அங்கிருந்து அவ்வப்போது திசையன் விளைக்கு வந்து கஞ்சா சப்ளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com