search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrested"

    • ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியை ஓட்டி வந்த ரகோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் திருமாள் தலைமையில் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 16 டன் ரேஷன் அரிசி 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மேற்கு தெருவை சேர்ந்த ரகோத்தமன் (வயது 27) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.
    • கலெக்டரின் மணல் லாரி,டிரைவர் கைது ,டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதியில் பல்வேறு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வந்தார். அப்போது அவர் கூட்டேரிப்பட்டு அருகே வந்தபோது எதிரில் மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.

    அப்போது சுதாரித்துக் கொண்ட மாவட்ட கலெக்டரின் டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் லாரியை கைப்பற்றி போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரட்டை கொலை வழக்கு சம்பவத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட் டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). சரக்கு ஆட்டோ டிரைவர். தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35), லாரி எலக்ட்ரிஷியன். நண் பர்களான இவர்கள் இருவ ரும்.நேற்று முன்தினம் மாலை புத்தாண்டை முன்னிட்டு வி.சி.மோட்டூரில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் மது அருந்தியதாக கூறப்படு கிறது.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை வேலுவை கத்தியால் குத்தி யுள்ளார். இதனை தடுக்க சென்ற சரவணனையும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்தி குத்தில் காயம டைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    அந்த சம்பவம் குறித்து துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் காண் டீபன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பதிவான ஒரு நபரை பிடித்து விசா ரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தீபா சத்யன் உத்தர வின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் வி.சி. மோட்டூரில் லாரி பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. இங்கு புத்தாண்டு விடுமுறை யையொட்டிலாரியை பழுது பார்ப்பதற்காக திருத்தணியை அடுத்த டி.புதூர் பெரிய தெருவை சேர்ந்த நிர்மல்கு மார் (25) என்றலாரிடிரைவர் தனது லாரியை பழுது பார்க்க கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

    அப்போது நிர்மல்குமாருக் கும், மெக்கானிக் சரவணனுக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிசரவணன் மற்றும் குழந் தைவேலு ஆகிய இருவரும் நிர்மல்குமார் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்த தாக கூறப்படுகிறது. மேலும் நிர்மல் குமாரை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. தொடர்ந்து குழந்தைவேலு யாருக்கோ போன் செய்துள்ளார்.

    இதனால் நிர்மல்குமார் அச்சமடைந்துள்ளார். திடீரென அவர் லாரியில் வைத்தி ருந்த கத்தியை எடுத்து குழந்தை வேலு மற்றும் சரவணன் ஆகியோரை சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக குத்தி உள்ளார்.

    நிர்மல்குமாருக்கு ஏற்கனவே கொலை முயற்சி கொள்ளை, அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் தொடர்புடையதும், அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள தாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிர் மல்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது.
    • போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சமீபகாலமாக லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, ஹான்ஸ் மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கையில் முற்றிலுமாக குறைந்து வருகிறது.இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு வேன் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை செஞ்சியில் இருந்து சேப்பட்டு நீலாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைப் பார்த்த போலீசார் உடனே வேனை மறித்து அதில் சோதனை செய்தனர். இதில் வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கீழ்ரவளந்தவாடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32) டிரைவர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து விழுப்புரம் குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தியை ஒப்படைத்தனர்.இது குறித்து குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி யார் மூலம் எங்கு கடத்த ப்பட்டுள்ளது மேலும் இந்தக் கடத்தலுக்கு தொடர்பா னவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
    • ஞானசுப்பிரமணியன் தொடர்ந்து வற்புறுத்தியதால் பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் டவுனில் உள்ள ஒரு தட்டச்சு பயிற்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் தனது தங்கைக்கு ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இருந்து வாலிபர் ஒருவர் காதலிக்குமாறு வற்புறுத்துவதாகவும், அவரை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து மர்மநபரை தேடியதில், அந்த நபர் பாளை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஞானசுப்பிரமணியன்(வயது 28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் தங்கை டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

    ஆனாலும் அவரை போன் செய்து தொந்தரவு செய்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்கள் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் சிவமணி (வயது 50). இவர் அந்த மாணவியிடம் நல்லவர் போல் பழகி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நாளடைவில் அவர், மாணவியிடம் தவறாக பழக தொடங்கினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் சொல்லி விடுவதாக கூறி எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிவமணி கேட்கவில்லை.

    மாணவியை பின்தொடர்ந்து தன்வலையில் வீழ்த்தினார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனக்கு சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி விட்டு, மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    • இன்று காலை உவரியில் இருந்து வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.
    • வெள்ளை மண்எண்ணை முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் உவரி சோதனைச்சாவடி வழியாக முறைகேடாக மண்எண்ணை மற்றும் குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் உவரி கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம் மீன்வளத்துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை 5.30 மணியளவில் உவரியில் இருந்து வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    அதில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு தமிழக மீன்வளத்துறை சார்பில் மானியமாக வழங்கும் வெள்ளை மண்எண்ணை சுமார் 400 லிட்டர் திருச்செந்தூருக்கு முறைகேடாக கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து உவரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த வள்ளிராஜா (வயது 42) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளி ஊருக்கு வேலைக்கு செல்ல கூடாது என ஆவேசம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கீழ் மோட்டூரை சேர்ந்த 20 பெண்கள் வாலாஜா அருகில் உள்ள ஒரு தனி யார் ஷூ நிறுவனத்தில் ஊழியாக ளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தினமும் அந்த நிறுவனத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் இயக் கப்படும் ஒரு வேனில் வேலைக்குச் சென்று வருகின்றனர்.

    அவர்களை அதே ஊரைச் சேர்ந்தவரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை இயக்கும் டிரைவரான ராஜ்குமார் (வயது 38) என்பவர், நீங்கள் இந்த ஊரில் இருந்து அந்த வேனில் சென்று வேலை செய்யக்கூடாது எனக்கூறி, அந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த 20 பெண்களும் சோளிங்கர் போலீசில் ராஜ்குமார் மீது புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இளம்பெண் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
    • இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று என்ன நடந்தது என கேட்டார்.

    கோவை

    கோவை போத்தனூரை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இவரை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவுக்கார பெண் கவனித்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லோடுவேன் டிரைவர் வரதராஜன் (வயது 43) என்பவர் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து வரதராஜன் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் வரதராஜன் வீட்டில் நிர்வாண நிலையில் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று என்ன நடந்தது என கேட்டார். அப்போது இளம்பெண் தன்னை வரதராஜன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

    இது குறித்து இளம்பெண்ணின் உறவுக்கார பெண் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிவைர் வரதராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி நள்ளிரவு 2 மணி அளவில் கான்கீரிட் கலவை லாரி ஒன்று சென்றது.

    100அடி சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (26) பி.இ. பட்டதாரி. இவர் பொன்னேரி அண்ணாசிலையில் இருந்து தேரடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஆஞ்சநேயர் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென கதவு திறந்தபோது நிலை தடுமாறிய ரகுபதி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு வருகிற ஜனவரி மாதம் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • துறையூர் அருகே திருச்சி மண்டல கனிமவளத்துறை பறக்கும் படை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
    • சரவணன் லாரியில் மண்னை அரசின் உரிய அனுமதி இன்றி கடத்தி செல்வது தெரிய வந்தது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிழக்குவாடி பகுதியில் திருச்சி மண்டல கனிமவளத்துறை பறக்கும் படை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (33) என்பதும், அவர் லாரியில் கப்பி மண்னை அரசின் உரிய அனுமதி இன்றி கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதனையடுத்து பறக்கும் படையினர் லாரியை பறிமுதல் செய்து, துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சரவணை கைது செய்தனர்.

    மேலும் லாரியின் உரிமையாளர், குவாரியின் உரிமையாளர் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் முத்து (வயது 24).

    கட்டிட தொழிலாளியான இவர் கோவையில் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் புறப்பட்டு சேலம் வந்து கொண்டிருந்தார்.

    இரவு சுமார் 11 மணிக்கு சேலம் சுந்தர்லாட்ஜ் சிக்னல் அருகே வந்தபோது, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் இருந்து முத்து கீழே விழுந்தார். இதில் அவரது கை முறிந்தது. முகத்திலும் பலத்த காயம் அடைந்தார்.

    மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை, ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், முத்து பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததும், அவரை அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கண்டு கொள்ளாமல் சென்றதும் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளருக்கு, செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பந்தப்பட்ட பஸ்சையும், டிரைவரையும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் பஸ்சை ஓட்டி வந்தார். அவரை போலீசார் கைது செய்து, பஸ்சை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து நடந்ததும், முதலில் பஸ்சை நிறுத்தி சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதன்பிறகு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இந்த இரண்டையுமே டிரைவரும், கண்டக்டரும் செய்யவில்லை. சி.சி.டி.வி. காமிரா உதவியால் தான், பஸ் அடையாளத்தையும் விபத்து எப்படி நடந்தது? என்பதையும் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது, என்றனர்.
    ×