search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் லாரி"

    • மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
    • இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு வாகனங்களின் பழுது நீக்கும் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கோளூர் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம், ஏலியம்பேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வருகின்றன.

    பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைந்து வருவதுடன் போக்கு வரத்து நெரிசல், மாசு, காரணமாக காலை-மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    மேலும் லாரிகளில் அளவுக்கு அதிகமான சவுடு மண் ஏற்றி செல்லும் போது அதனை தார்பாய்மூலம் மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் மதியழகன், இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மணல் லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
    • மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர்.

    இவரது மனைவி ஜெரினா பேகம் (வயது 36).

    இவர் இன்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில்

    படிக்கும் தனது மகள் சபிகா (14) , மகன் முகமது சைபு (4) ஆகியோரை விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினாபேகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குழந்தைகள் சபிகா, முகமது சைபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், அங்கு வேகத்தடை அமைக்க கோரி மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மருத்துவக் கல்லூரி போலீசார், போக்குவரத்து காவல் ஒழுங்கு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • சிதம்பரம் அருகே மணல் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.  தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் இதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மா.மங்கலம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சோழத்தரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த ஒப்பந்தராரரின் பணியாட்கள் பொது மக்கள் மீது காரை ஏற்றுவது போல வந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் போலீசார் மற்றும் ஒப்பந்ததாரரின் பணியாட்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்போதோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    • மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.
    • கலெக்டரின் மணல் லாரி,டிரைவர் கைது ,டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதியில் பல்வேறு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வந்தார். அப்போது அவர் கூட்டேரிப்பட்டு அருகே வந்தபோது எதிரில் மணலை ஏற்றிவந்த லாரி, கலெக்டரின் வாகனத்தை மோதும்படி வந்தது.

    அப்போது சுதாரித்துக் கொண்ட மாவட்ட கலெக்டரின் டிரைவர் வாகனத்தை லாவகமாக திருப்பி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் லாரியை கைப்பற்றி போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×