கடலூரில் அரசு பணிமனை சுற்றுச் சுவர் மீது மோதி கவிழ்ந்த மணல் லாரி:டிரைவர் காயமின்றி தப்பினார்

மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது.
லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி
லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு வாகனங்களின் பழுது நீக்கும் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பணிமனையில் சுற்றுச்சு வர் மற்றும் இரும்பு கதவு உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com