search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstrated"

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நேற்று நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும், அதில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறித்தும், ஊழலில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, பழனியம்மாள், சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    குளித்தலை:

    எல்.ஐ.சி. பாலிசி பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசி தாரர்களுக்கான போனஸ்சை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. முதலீட்டை நலிவடைந்த வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான காலவரை யறையை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக மாற்ற வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அனுமதித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எல்.ஐ.சி. நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் அன்றிலிருந்து ஒருவாரம் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் இறுதிநாளான நேற்று மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ஒட்டன்சத்திரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஒட்டன்சத்திரம்:

    வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை மேம்படுத்த ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வருவாயத்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் செல்வேந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சசி முன்னிலையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் பத்மாவதி, தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு காலிபணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். #tamilnews
    சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அர்ஜூனன், ம.தி.மு.க. நக்கீரன், இந்திய கம்யூனிஸ்டு மாடசாமி, காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. ராஜ், திராவிடர் கழகம் பெரியார் அடியான், விடுதலை சிறுத்தை அகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மற்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அன்பழகன், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ்கஸ்தூரி தங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் பாலகுருசாமி, ராமர், சங்கர், மாநகர் அவைத்தலைவர் ஆறுமுகம்,

    இணைச்செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கபேரியேல் ராஜ், துணை அமைப்பாளர் நிர்மல் ராஜ், காங்கிரஸ் சார்பில் தேவி பிரபாகர், சந்திரபோஸ், மைதீன், குமார முருகேசன், நடே‌ஷகுமார், முத்து விஜயா, ம.தி.மு.க. சார்பில் முருக பூபதி, ரூஸ்வெல்ட்,

    சுந்தர்ராஜ், மகாராஜன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ராஜா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கோட்டு ராசா, ரவீந்திரன், பாலு, திலகராஜ், சாரதி, பிரபாகர், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். 
    திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பேரையூர்:

    ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளருக்கு பிற துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் காலிபணியிடங்களை நிரப்பாமல் சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய சொந்த செலவில் சமையலர்களை கூலிக்கு அமர்த்தும் அவல நிலை உள்ளது. இதனை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒன்றிய தலைவர் தனபால் தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணி வண்ணன், அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் சந்தரபாண்டி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் செலின் பிரமிளா நன்றி கூறினார். #tamilnews
    மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனைத்து பயணப்படிகளும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை பேட்ஜ் அணிவது, தர்ணா உள்பட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அரசின் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கவன ஈர்ப்பு பேரணி புறப் பட்டது. பேரணிக்கு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிவ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரியில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். 
    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

    போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.

    போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராபின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், தொழிற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முரளிதரன், குமார், பிரபு சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் திரளான அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    வேலூரில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேலூர்:

    மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை திருத்த கூடாது, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் தொழில் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

    அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு, ஆம்பூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தன.

    இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சம்பத், ஆம்பூர் அரசு, பாலகிருஷ்ணன், சுப்பிரமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், சுங்கச்சாவடி கட்டணத்தை கைவிடக்கோரியும், மோட்டார் வாகன துறைக்கு தனிவாரியம் அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதேபோல் ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுற்றுலா வேன், கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 
    திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிக்கும் மாசிலாமணி மகன் மணிகண்டன் (வயது 27).

    இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மணிகண்டன் பலியானதாக கூறப்படுகிறது.

    திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசிநாத்துரை, தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில், ‘‘ திருட்டு வழக்கில் போலீஸ் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால், இறப்பு குறித்து நீதி விசாரணையும், பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’, என்றார். #tamilnews
    கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் இந்த சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமஜெயம், கந்தசாமி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், நல்லம்பள்ளி கிளை துணைத்தலைவர் முருகன், நிர்வாகிகள் உஷாராணி, ருக்மணி, சீனிவாசன் ஜம்பு, லலிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பொதுவினியோகத்திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன்கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ரேஷன்கடைபணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ×