search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LIC Agents"

    • நத்தத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நத்தம்:

    நத்தத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு லியாபி சங்கத்தின் கிளைத் தலைவர் சையதுகனி தலைமை தாங்கினார்.

    செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். பொருளாளர் நடராஜன், துணைத் தலைவர்கள் முத்து பாண்டி, அகஸ்டின் ஜெகநாதன், செயலாளர்கள் முத்தழகன், அகஸ்டின் கேசவன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் துணைச் செயலாளர் கேசவன் நன்றி கூறினார்.

    • எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாலிசி போனசை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் சக்தி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பழனி, செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன், பொருளாளர் தாண்டவகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    பாலிசி போனசை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு சேவை அளிக்க வேண்டும். அனைத்து விண்ணப்பத்துக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்.

    முகவரின் பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ குழு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    குளித்தலை:

    எல்.ஐ.சி. பாலிசி பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசி தாரர்களுக்கான போனஸ்சை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. முதலீட்டை நலிவடைந்த வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான காலவரை யறையை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக மாற்ற வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அனுமதித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எல்.ஐ.சி. நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் அன்றிலிருந்து ஒருவாரம் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் இறுதிநாளான நேற்று மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். 
    ×