search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சங்கத்தினர்"

    • திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு
    • குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார்

    நாகர்கோவில் :

    திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார். திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதர்சன், குற்றியார் நிமால், தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவட்டார் பணிமனை செயலாளர் சதீஷ் வரவேற்றார். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், முன்னாள் பணிமனை செயலாளர் ரவீந்திரன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பணிமனை பொறுப்பு மேலாளர், பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் தாலுகாவிற்கு தண்ணீர் திறக்கப் பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
    • இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளி விழா பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவிலும், துறை சார்ந்த வகையிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை மாதம் பரப்புரை இயக்கம் நிறைவடைந்த பின்பு வெள்ளையனே வெளியேறு நாளான ஆகஸ்ட் 9-ந் தேதி மாநில அளவிலான திரள் அமர்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    துறை சார்ந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தொடங்கி வேலை நிறுத்தம் வரை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அந்தத்துறைக்கு வெளியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து ஆதரவு வேண்டும்.மாநில அளவிலான பெருந்திரள் அமர்வு போராட்டத்திற்குப் பிறகு, அதன் அனுபவங்களை ஆய்வு செய்து, இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்குசி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடைபயணம் நடத்தினர்.
    • 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள்.

    மானாமதுரை

    உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள். இதன் ஒரு குழுவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீரையா தலைமையில், செயலாளர் சேதுராமன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் தங்கமோகன், சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் வந்த நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, துணைத் தலைவர் லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்க பூபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நடைபயண நோக்கங்களை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார் பேசினார்.

    ×