search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutritional staff"

    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு கட்டணமாக ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாநில அளவில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

    ஆனால், அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் கடந்த 29-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.

    சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அதன் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆனாலும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால், நேற்றும் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சத் துணவு ஊழியர்கள் கையில் குடை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியத்தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் தலைமையில் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் முன்னிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    பின்னர் இட்டமொழி மெயின் ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட திரளானபேர்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க துணைத்தலைவர் சேசுமணி, வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    மெயின் பஜாரில் சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்கள் கோ‌ஷம் போட்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் 57 பேர் உள்பட 65 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் கைது செய்தார். #tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வரையறுக்கப்பட்ட ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    போராட்டம் நடைபெற இருந்த ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அங்கு திரண்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரம்மாள், மாநில செயலாளர் ஆண்டாள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பேரையூர்:

    ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளருக்கு பிற துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் காலிபணியிடங்களை நிரப்பாமல் சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய சொந்த செலவில் சமையலர்களை கூலிக்கு அமர்த்தும் அவல நிலை உள்ளது. இதனை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒன்றிய தலைவர் தனபால் தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணி வண்ணன், அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் சந்தரபாண்டி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் செலின் பிரமிளா நன்றி கூறினார். #tamilnews
    ×