என் மலர்
செய்திகள்

காலிபணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை மேம்படுத்த ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வருவாயத்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் செல்வேந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சசி முன்னிலையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் பத்மாவதி, தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு காலிபணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். #tamilnews

Next Story