search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revenue Officers"

    • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.
    • வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

    315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

    • தனி தாசில்தார் மனோஜ் முனியன் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.
    • பிரச்சனை காரணமாக தனித்தாசில்தாரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த மனோஜ் முனியன் என்பவர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளார். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக தனித் தாசில்தாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரை சஸ்பெண்டு செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு தலைமையில் ஊழியர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப் பாக பணியாற்றிய வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேசன் முதல் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரெங்கநாதன் 2-ம் பரிசும், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் 3-ம் பரிசும், சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் காரியா பட்டி தனி வட்டாட்சியர் அய்யக்குட்டி முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்தி 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் மகேஸ்வரி 3-ம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன் முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி மற்றும் வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியர் (பொ) ரமேஷ்குமார் ஆகியோருக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப்பிள்ளை 2-ம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்க ளில் ராஜபாளையம் வட்டத்துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தன் 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜ் 3-ம் பரிசும், அதிக எண்ணிக்கை யில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்டம் நில அளவர் காஜாமைதீன் முதல் பரிசும், ராஜ பாளையம் வட்டம் குறுவட்ட அளவர் காளிமுத்து 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் சார் ஆய்வாளர் சங்கிலீஸ் வரி 3-ம் பரிசினையும் கலெக்டர் வழங்கினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராக பணியாற் றிய மார்டின் ராஜன் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பணியிடத்திற்கும், தொண்டி தனி வட்டாட்சியர் அலகு 2-ல் பணியாற்றிய ஸ்ரீதரன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், முதுகு ளத்தூர் தனி வட்டாட்சியராக பணியாற்றிய தென்னரசு ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும்,

    பரமக்குடி தனித்துணை வட்டாட்சியர் அலுவலக பணியாற்றிய காதர் மைதீன் தனி வட்டாட்சியராக ஆதிதிராவிடர் நலப்பிரிவிற் கும், பரமக்குடி தனி வட்டாட்சியராக பணியாற் றிய சடையாண்டி முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் சாந்தி ஆதிதிராவிடர் நலப்பிரிவிற்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன் மணி, தனி வட் டாட்சியர் அலகு-2 பிரிவிற்கும்,

    ராமநாதபுரம் தனி வட்டாட்சியர் ஜமால் முகம்மது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக் குழு அலுவலராக வும், கடலாடி முன்னாள் வட்டாட்சியர் பரமசிவம் ராம–நாதபுரம் உதவி மேலாளர் டாஸ்மாக் லிமிடெட் பிரி–விற்கும், முன்னாள் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர் முக உதவியாளர் தனி வட் டாட்சியராக அலகு 4-ல் பணியாற்றிய முருகவேலு ராமநாதபுரம் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக மேலாளராகவும், பரமக் குடி தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) இந்து அறநிலையத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் கழக தலைமை உதவியாளராக பணியாற்றிய சத்திய பாமா பரமக்குடி தனி வட்டாட்சியர் (இந்து அற–நிலையத்துறை) நியமிக் கப்பட்டுள்ளனர். இந்த உத்த–ரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.

    இந்த உத்தரவு குறித்து விடுப்பு விண்ணப்பமோ, முறையீடோ ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. பணி நியமனம் பெற்றவர் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தால் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    வருவாய் துறையில் துணை கலெக்டர் நிலையில் பதவி உயர்வு வழங்கும் பட்டியலை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாமல் இருப்பதனால் பலர் பதவி உயர்வு பெறும் முன்பே ஓய்வு பெற்று விடுகின்றனர்.

    இதுபோல் பல ஆண்டுகளாக துணை தாசில்தாராக பணி செய்து வருபவர்கள் பட்டியல் திருத்தங்கள் காரணமாக முதல் நிலை வருவாய் ஆய்வாளராக பணி இறக்கம் செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டியும் கடந்தவாரம் வருவாய் துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அலு வலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சான்றிதழ்கள் பெறுவது, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

    நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலு வலங்களில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகள் இன்று பணிக்கு வரவில்லை.

    அறந்தாங்கி அருகே பழங்கால சாமி சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி ஊராட்சி மன்றத்திற்கு ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் அங்குள்ள சிவன் கோவில் அருகே கட்டப்பட உள்ளது. இதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று தொழிலாளர்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டனர். குழிகள் பாதி தோண்டியபோது மண்ணுக்குள் 2 ½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, அடித்தள பீடம், பலி பீடம் ஆகியவை புதைந்து கிடந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரகாசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் சிலை மற்றும் பீடங்களை மீட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்றும் அதே இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது நேற்று அம்மன் சிலை எடுக்கப்பட்ட இடத்தின் கீழே தோண்டப்பட்டபோது, மீண்டும் சுமார் 2½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, ½ அடி உயரத்தில் பைரவர் சிலை மற்றும் முகம் சேதமடைந்த நிலையில் நாயன்மார்கள் சிலை கிடந்தது.

    அந்த சிலைகள் சிதைந்து விடாத வகையில் பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் சிலைகளை மீட்டு சென்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் 150 முதல் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனவும், உலோகத்தால் செய்யப்பட்ட அவை ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அவற்றினை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தான் அவை எந்த காலத்தில், எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என்பது தெரியவரும்.

    அறந்தாங்கி அருகே சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவவே, பொதுமக்கள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அம்மன் சிலைகள், பைரவர் சிலை, நாயன்மார்கள் சிலை, பலி பீடம், அடி பீடம் ஆகியவை மீட்கப்பட்ட பகுதியில் இன்னும் பல்வேறு சிலைகள் புதைந்து கிடக்கலாம். ஏனென்றால் அப்பகுதியில் பழமைவாய்ந்த சிவன்கோவில் இருந்துள்ளது. மேலும் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்கான தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களும் புதைந்து கிடக்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் அப்பகுதி முழுவதும் அகழ் ஆராய்ச்சி மேற்கொண்டு மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் புதையல்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஒட்டன்சத்திரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஒட்டன்சத்திரம்:

    வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை மேம்படுத்த ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வருவாயத்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் செல்வேந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சசி முன்னிலையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் பத்மாவதி, தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு காலிபணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். #tamilnews
    நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனியம்மாள், தனி தாசில்தார்கள் சரவணன், குமரன், மாதேஸ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உதவி கலெக்டர் பேசுகையில், இ சேவை, மக்கள் கணினி மையம், கூட்டுறவு கடன் சங்க இ சேவை ஆகிய மையங்களில் இருந்து இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும். நில அளவை தொடர்பான கோப்புகள் தேங்காமல், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று கூறினார். 
    நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

    வருவாய்த்துறையை அதன் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு சிறப்புத்துறையாக அறிவித்து தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி நிமித்தமாக சென்னை செல்லும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தங்க வசதியாக விடுதி வளாகம் ஏற்படுத்தி தரவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்போனுக்கு இன்டர்நெட் வசதியுடன் மாதாந்திரக் கட்டண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    கள ஆய்வுப்பணிக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவிற்கு என பிரத்யேகமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிப்பது. பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×