search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sami Statue"

    • போலீசார் விசாரணை
    • புதையல் ஆசையால் தோண்டிய பள்ளத்தில் கூழாங்கற்கள் கிடைத்தது


    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப் பல்லி ஊராட்சியை சேர்ந்தது நலங்காநல்லூர் கிராமம் இந்த கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் என்பவர்க்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

    பழமையான கோவில்

    இவரது நிலத்தில் பல நூற் றாண்டுகள் பழமை வாய்ந்த நாகாலம்மன் கோயில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் இந்த கோயிலுக்கு சென்று கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

    சாமி சிலைகள் திருட்டு

    மேலும் இங்கு புதையல் இருப்பதாக கிராம மக்கள் நம்பி வருவதாக கூறப்படு கிறது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதியன்று மாலை சுமார் 3 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் வந்த 5 பேர் கும்பல் ஒன்று கடப்பாரை மண்வெட்டி கொண்டு நாகாலம்மன் கோயிலுக்கு சென்று சுமார் 2 அடி ஆழம் தோண்டி அங்கிருந்த 3 நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி சென்றனர்.

    இதனை பார்த்த அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் சென்று கேட்டபோது நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக ஏமாற்றி திசை திருப்பினர். தகவலறிந்த கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்ற போது மின்னல் வேகத்தில் காரில் தப்பித்து சென்றனர்.

    இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் நலங்கா நல்லூர் கிராம மக்கள் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு , சப் இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் காரில் சிலைகளை கடத்திய மர்ம கும்பல் யார் என தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மொரசப்பல்லி ஊராட்சி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ராம் (26) என்பவர் கும்பலுக்கு உடந்தையாக ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து ராமை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ராமின் சகோதரியின் கணவர் ராமச்சந்திரன் (32) குடியாத்தம் பார்வதியாபுரம் சேர்ந்தவர் இவரது நண்பரான கூட நகரம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (29) என்பவர் நண்பர் ராமச்சந்திரனிடம் பாழடைந்த பழைய கோயில் உள்ள தா தன்னிடம் புதையல் எடுக்கும் ஆட்கள் உள்ளனர் என கூறி பணம் தருவதாக ஆசை காட்டியதால் ராமச்சந்திரன் தன்னுடைய மைத்துனர் ராமிடம் நலங்கா நல்லூர் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோயில் குறித்து கூறிஉள்ளார்.

    இதைத்தொடர்ந்து, புதையல் எடுக்கும் மந்திர வாதியான அணைக்கட்டு தாலுகா டி.சி.குப்பம் அருகே வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் நலச்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஹபிபுல்லா (45) மற்றும் அந்த அமைப் பைச் சேர்ந்த அவரது நண்பரான வேலுார் பாகாயம் பகுதியில் வசிக்கும் ஆதம்பாஷா (32) என்பவரும் ராமச்சந்திரன் மற்றும் விஜயனுடன் சேர்ந்து, மொரசப்பல்லி ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராம் (26), அவரது தந்தை செல் வம் (55) ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஹபி மச் புல்லாவுக்கு சொந்தமான நம்பர் பிளேட் இல்லாத கட் சொகுசு காரில் நலங்கா ல்நல்லுார் வந்துள்ளனர்.பின்னர், நாகாலம்மன் கோயிலுக்கு சென்று நிலத் தடி நீர்மட்டம் பார்க்க வந்ததாக கிராம மக்களி டம் பொய் சொல்லி, புதை யலுக்கு ஆசைப்பட்டு தோண்டியுள்ளனர்.

    ஆனால், அதில் வெறும் கூழாங்கற்கள் மட்டுமே கிடைத்ததாக வும், சிலைகளை கடத்து வதாக எண்ணி கிராம மக்கள் துரத்தியதால், காரில் தப்பியதாகவும் போலீசாரிடம் அந்த கும்பல் தெரிவித்தது.

    கூழாங்கற்கள் கிடைத்தது

    இதையடுத்து, பேர ணாம்பட்டு போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர். 

    • திட்டக்குடி அருகே அம்மன் கோவிலில் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ஆராமுது அம்பாள் சமேத ஸ்ரீ திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. கிராமத்தில் இந்த கோவிலை புரணமைப்பு செய்ய வேண்டும் என கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு முதல் ஆலய திருப்பணிகள் தொடங்கியது. மீண்டும் ஊர் பொதுமக்கள் கூடி வீட்டிற்கு வீடு வரி வசூல் செய்து கோவிலின் திருப்பணியானது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலயத்தின் முன்பு புதிதாக மண்டபம் அமைப்பதற்காக நேற்று காலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    அப்போது கோயிலின் வலது பக்கத்தில் முதல் பள்ளத்தில் ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் அம்மன் சிலையை பார்ப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் குவிந்தனர். அம்மன் சிலை கோவில் கருவிழி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்அல்லது வேறு ஏதும் உலோகத்தால் ஆனதா என ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அம்மன் சிலை கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    அறந்தாங்கி அருகே பழங்கால சாமி சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி ஊராட்சி மன்றத்திற்கு ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் அங்குள்ள சிவன் கோவில் அருகே கட்டப்பட உள்ளது. இதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று தொழிலாளர்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டனர். குழிகள் பாதி தோண்டியபோது மண்ணுக்குள் 2 ½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, அடித்தள பீடம், பலி பீடம் ஆகியவை புதைந்து கிடந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரகாசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் சிலை மற்றும் பீடங்களை மீட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்றும் அதே இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது நேற்று அம்மன் சிலை எடுக்கப்பட்ட இடத்தின் கீழே தோண்டப்பட்டபோது, மீண்டும் சுமார் 2½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, ½ அடி உயரத்தில் பைரவர் சிலை மற்றும் முகம் சேதமடைந்த நிலையில் நாயன்மார்கள் சிலை கிடந்தது.

    அந்த சிலைகள் சிதைந்து விடாத வகையில் பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் சிலைகளை மீட்டு சென்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் 150 முதல் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனவும், உலோகத்தால் செய்யப்பட்ட அவை ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அவற்றினை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தான் அவை எந்த காலத்தில், எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என்பது தெரியவரும்.

    அறந்தாங்கி அருகே சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவவே, பொதுமக்கள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அம்மன் சிலைகள், பைரவர் சிலை, நாயன்மார்கள் சிலை, பலி பீடம், அடி பீடம் ஆகியவை மீட்கப்பட்ட பகுதியில் இன்னும் பல்வேறு சிலைகள் புதைந்து கிடக்கலாம். ஏனென்றால் அப்பகுதியில் பழமைவாய்ந்த சிவன்கோவில் இருந்துள்ளது. மேலும் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்கான தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களும் புதைந்து கிடக்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் அப்பகுதி முழுவதும் அகழ் ஆராய்ச்சி மேற்கொண்டு மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் புதையல்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வந்தவாசி அருகே ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 300 டன் எடை கொண்ட சாமி சிலையை எடுத்துச்சென்ற கார்கோ லாரி டயர்கள் பாரம் தாங்க முடியாமல் வெடித்தது.
    வந்தவாசி:

    பெங்களூரு ஈஜிபுரம் பகுதியில் கோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளைக்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஒரே கல்லில் பெரிய அளவில் விஸ்வரூப விஷ்ணு சிலையுடன் 7 தலை கொண்ட ஆதிசே‌ஷன்பாம்பு சிலை ஆகியவை பீடத்துடன் சேர்த்து 108 அடி உயரம் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலைக் குன்றின் அருகில் இதற்கான கற்பாறை இருப்பது செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கற்பாறை அறுத்து எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இந்த பெரிய கற்பாறையில் விஸ்பரூப விஷ்ணு 11 முகங்களுடன், 22 கைகளுடன், சங்கு, சக்கரம் செதுக்கப்பட உள்ளது. தற்போது சுவாமியின் பெரிய நடுமுகம் செதுக்கப்பட்டது. இதன் எடை 380 டன் ஆகும்.

    இந்த சிலை மற்றும் சிலை வைப்பதற்கான பீடத்திற்கான 230 டன் எடையுள்ள பாறை ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெரிய சிலையை எடுத்துச் செல்ல 170 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர் மற்றும் சிறிய சிலையை எடுத்துச் செல்ல 90 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அழுத்தம் தாங்காமல் டயர்கள் வெடித்ததால் அப்போது எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2 சிலைகளின் பக்கவாட்டு பகுதிகளை செதுக்கி சாமி சிலை 300 டன்னாக எடை குறைக்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக சாமி முகம் செதுக்கப்பட்ட கற்பாறையை பெங்களூருக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் 240 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர்கள், 3 இழுவை வாகனங்கள் கொண்டு வரப்பட்டு அதில் சாமி சிலை ஏற்றப்பட்டது.

    பின்னர் நவீன டிரெய்லரை அந்த பகுதியில் இருந்து சாலைக்கு கொண்டு வருவதற்காக இழுவை வாகனங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது,

    நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் லாரி மூலம் இயக்கியபோது மண் சாலைக்குள் டயர்கள் சிக்கியது. இதில் சிலையின் பாரம் தாங்காமல் லாரியின் 6 டயர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு வெடித்த டயர்களுக்கு பதில் வேறு டயர் மாற்றிவிட்டு புதைந்த இடத்தில் லாரி சக்கரம் மண்ணில் சிக்காத வகையில் டயரின் கீழ் பகுதியில் இரும்பு தகடுகளும், கற்களையும் கொட்டி சாலை அமைத்தனர்.

    கடந்த சில நாட்களில் இதன் பலனாக 1000 அடிக்கு மேல் டிரெய்லர் நகர்ந்து கொரக்கோட்டை-செட்டிக்குளம் சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி டிரெய்லர் மீது ஏறி ஏற்றப்பட்ட பெருமாள் சாமியின் நடுமுகம் செதுக்கப்பட்ட கற்பாறை மற்றும் கார்கோ டிரெய்லர், இழுவை வாகனங்களை பார்வையிட்டார். சாமிசிலை செல்லும் வழித்தடம், சாலை வசதி ஆகியவை குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த சிலை ஏற்றிய கார்கோ டிரெய்லர் தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை, செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் வழியாக பெங்களூரு செல்கிறது. பெங்களூரு சென்றடைய 50 நாட்கள் ஆகும்.

    கார்கோ டிரெய்லர் செல்லும் சாலைகளில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் தான் அந்தந்த பகுதிகளை டிரெய்லர் கடக்கும்’ என்றார். #tamilnews
    ×