நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தனி தாசில்தார் மனோஜ் முனியன் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார். பிரச்சனை காரணமாக தனித்தாசில்தாரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர்.
Published on

நெல்லை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த மனோஜ் முனியன் என்பவர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளார். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக தனித் தாசில்தாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரை சஸ்பெண்டு செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு தலைமையில் ஊழியர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com