search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead"

    • சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சர்க்கார்பதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி வைரமணி (வயது 36). இவர்கள் மோகன் என்பவரது தோட்டத்தில் 15 ஆண்டுகளாக தங்கி இருந்து விவசாய தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவரை அவரது கணவர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). இவர் பீளமேடு அருகே உள்ள வீரியம்பாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று மழை பெய்து கொண்டு இருந்தது. ஸ்ரீகாந்த் அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அவர் மின் கம்பத்தை தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார் அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது55). வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் முகவராக இருந்து வந்தார். இவரது குலதெய்வ கோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளது.

    இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து வாடகை காரில் கருப்பசாமி, அவரது மனைவி தனலட்சுமி (50), மகள் சீதாலட்சுமி (20) ஆகியோர் புறப்பட்டனர்.

    காரை மதுரை தோப்பூரைச் சேர்ந்த பால்பாண்டி (50) என்பவர் ஓட்டி சென்றார். வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நகரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

    இதில் காருக்குள் இருந்த கருப்பசாமி, கார் டிரைவர் பால்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஏட்டு சுந்தர பாண்டி விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி இருந்த கருப்பசாமி, பால் பாண்டியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
    • ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 64). மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.

    இவரது மனைவி சாந்தி (57). இவர்களது மகன் அஜித் நிவாஸ் (34). நேற்று இரவு ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.

    இதில் ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ராமகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • யானைகள் தடுப்பு அகழி பகுதியில் பிணமாக மீட்பு
    • காட்டெருமையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்புக்காடு ஜக்கனரி டெப்போ பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனடியாக வனத்துறையினர் துர்நாற்றம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள யானை தடுப்பு அகழி பகுதியில் ஆண் காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். தொடர்ந்து கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை இறந்தது தெரியவந்தது.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி ஒருவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர் அழகாபுரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தாத்தாவும் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
    • பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோவிலூர் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). பைக் மெக்கானிக்.

    இவரது மகள் ஹாசினி (15). இவர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஹாசினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

    பேத்தியின் தற்கொலையால் தாத்தா சுப்பிரமணியன் (75 ) சோகத்துடன் காணப்பட்டார். பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.

    பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்ததால் அந்த பகுதி மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

    • காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
    • விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சண்முகானந்தம். இவர் இவரது மனைவி புஷ்பவல்லி (வயது 47), இவர்களது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோர் குடும்பத்தினருடன் நேற்று காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    காரை திருக்குமரன் என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் அந்தியூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூர் அருகே அரவக்குறிச்சி என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் எஸ்.ஜி.சண்முகானந்தம் சீட்பெல்ட் அணிந்திருந்தார். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதில் அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி புஷ்பவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர்.

    டிரைவர் திருக்குமரன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • 3 ரோடு பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக வினித்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் தேசிங் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் சின்னதிருப்பதி கம்பர் தெருவை சேர்ந்த பாபு மகன் வினித்குமார். இவர் 3 ரோடு பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்களில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    3 ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு முன்னால் அதே கம்பெனியில் பணிபுரியும் தேசிங் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வினித்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் தேசிங் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 3 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வினித்குமார் இறந்தார். தேசிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிதம்பரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து நகைக்கடை உரிமையாளர் மனைவி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழரதவீதி பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி (வயது 42). மங்கேஷ்குமார் கீழரத வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சுபாங்கியின் தம்பி நாம்தேவ் கடந்த சில நாட்களாக தனது அக்காள் சுபாங்கிக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலையில் சுபாங்கிக்கு நாம்தேவ் கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வந்தார்.

    இந்த கார் சிதம்பரத்தில் இருந்து தெற்கு பிச்சாவரம் சாலையில் சென்றது. அப்போது சுபாங்கி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் இருந்த வடிகால் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கார் ஆற்றில் வேகமாக பாய்ந்ததால் காரில் இருந்த சுபாங்கி, அவரது தம்பி நாம்தேவ் ஆகியோர் செவ்வதறியாது திகைத்தனர். பின்னர் நீரில் கார் மூழ்கியது. காரில் இருந்து தம்பி நாம்தேவ் மட்டும் போராடி வெளியே வந்து விட்டார். ஆனால் சுபாங்கியால் காரை விட்டு வெளியேவர முடியவில்லை. நாம்தேவ் காருக்குள் மாட்டிக்கொண்ட அக்காளை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களின் உதவியுடன் நாம்தேவ் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய காரை போராடி மீட்டனர்.

    நீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் காருக்குள் இறந்த நிலையில் சுபாங்கி கிடந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் காரினுள் இறந்து கிடந்த சுபாங்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாங்கிக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

    சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

    ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

    • சூலூர் சரகத்தில் மட்டும் 2 பேர் வாகனம் மோதி உயிரிழப்பு
    • மோட்டார் சைக்கிளில் சென்ற காளிமுத்து கார் மோதி சாவு

    கோவை,

    சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (60). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் மொபட்டில் கொச்சி- சேலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து ெமாபட் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெயராம் (24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம்- கொச்சிரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ். குளத்தை சேர்ந்தவர் காளிமுத்து (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் துடியலூர்- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளிமுத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×