search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycles collide"

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி ஒருவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர் அழகாபுரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • விபத்தில் ஞானபிரகாஷ் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வசந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய தாஸ். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 22). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெரு ந்துறை-குன்னத்தூர் ரோட்டில் சீனாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றோரு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தை சேர்ந்த கபிலன் (18) மற்றும் கோபிசெட்டிபாளைம் அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரது மகன் ஜெய் ஸ்ரீ பாலாஜி (18) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ஞான பிரகாஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் ஜெயஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஞானபிரகாஷ் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ஜெய்ஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் பெரு ந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே காட்டு கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 27) இவர் நேற்று இரவு நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் நேரு சிலை வழியாக என்எல்சி ஆர்ச் கேட்டுக்கு தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது இவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் நெய்வேலி அரசுகுழி பகுதியைச் சேர்ந்த செந்தமிழர் மகன் பிரசாந்த் (19) வந்தார். இருவரும் எதிர்பாராத நேரத்தில் வேகமாக மோதிக்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சச்சிதானந்தம் பிரசாந்த் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சச்சிதானந்தத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதை பார்த்த அக்கமுக்கு உள்ளவர்கள் அவர்களை மீட்டு என்எல்சி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சச்சிதானந்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுல் ஹமீர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×