நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி
Published on

கடலூர்:

நெய்வேலி அருகே காட்டு கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 27) இவர் நேற்று இரவு நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் நேரு சிலை வழியாக என்எல்சி ஆர்ச் கேட்டுக்கு தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது இவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் நெய்வேலி அரசுகுழி பகுதியைச் சேர்ந்த செந்தமிழர் மகன் பிரசாந்த் (19) வந்தார். இருவரும் எதிர்பாராத நேரத்தில் வேகமாக மோதிக்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சச்சிதானந்தம் பிரசாந்த் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சச்சிதானந்தத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதை பார்த்த அக்கமுக்கு உள்ளவர்கள் அவர்களை மீட்டு என்எல்சி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சச்சிதானந்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுல் ஹமீர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com