search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Accident"

    • விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள சக்தி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 17-ந்தேதி இவரது மனைவி பாரதி (25), மகன் ஸ்ரஏயன் (4) மற்றும் 4 மாத குழந்தை மேக்னா ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை ராஜேஷ் ஓட்டி சென்றார்.

    ஈரோடு மேட்டூர் ரோட்டில் அம்மாபேட்டை அடுத்து கோனேரிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை உள்ள தனியார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 4 மாத குழந்தை மேக்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
    • விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சண்முகானந்தம். இவர் இவரது மனைவி புஷ்பவல்லி (வயது 47), இவர்களது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோர் குடும்பத்தினருடன் நேற்று காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    காரை திருக்குமரன் என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் அந்தியூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூர் அருகே அரவக்குறிச்சி என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் எஸ்.ஜி.சண்முகானந்தம் சீட்பெல்ட் அணிந்திருந்தார். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதில் அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி புஷ்பவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர்.

    டிரைவர் திருக்குமரன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாதேஸ்வரி (50). இவர்களது ஒரே மகன் சிவானந்தம் (18).

    இந்நிலையில் நேற்று காலை மாதேஸ்வரி தனது மகன் சிவானந்தத்துடன் அவிநாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிவானந்தத்துடன் மாதேஸ்வரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிவானந்தம் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்னால் மாதேஸ்வரி அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

    நம்பியூர் பவர் ஹவுஸ் மேடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளி தீபக் (எ) திம்பா செட்டோம் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தீம்பா செட்டோம் ஓடி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இது குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் படுகாயம் அடைந்த மாதேஸ்வரி மற்றும் சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைப்போல் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் தீம்பா செட்டோமை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அதேபோல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீம்பா செட்டோமும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (55). ஈரோடு- கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர்கள் 2 பேரும் தொழிலாளர்கள்.

    இன்று காலை 11.30 மணி அளவில் இவர்கள் கவுந்தப்பாடி அருகே ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் செம்புத்தம்பாளையம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது கான்கிரீட் கலவை எந்திரம் மோட்டார் சைக்கிளுடன் 2 பேரையும் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்றது.

    இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன், சக்திவேல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். இதுகுறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக கான்கிரீட் கலவை எந்திரத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் விருத்தாசம்பட்டியை சேர்ந்த திவ்யநாதன் (40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன் பிஜி (வயசு 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ரோஷன் பிஜி மோட்டார் சைக்கிளில் தனது நண்பரை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இறக்கி விட்டு மீண்டும் மணல் மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஈரோடு சென்னிமலை ரோடு, பழைய கூட் செட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். அந்த பகுதியில் புதிதாக ரோடு போடுவதற்காக சாலையை தோண்டி வைத்துள்ளனர்.

    இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ரோஷன் தலையில் ஏறி இறங்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய ரோசனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோஷன் பிஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
    • நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி அம்மன் நகர், ஈ.பி.ஆபிஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது.

    அதேபோல் சிவகிரி திரு.வி.க. பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது19). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு அருண்குமார், மணிகண்டன் 2 பேரும் கொடுமுடிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்கு மாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலை பிரேத பரிசோத னைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் உடலையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி தம்பதியினர் ரோட்டில் கீழே விழுந்தனர்.
    • அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் தம்பதி மீது ஏறி இறங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). ஓய்வுபெற்ற வன ஊழியர். இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்கள் 2 பேரும் இன்று காலை 9 மணி அளவில் நாதகவுண்டம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் புறப்பட்டனர்.

    அவர்கள் செட்டிபாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது திடீரென மொபட்டில் இருந்து நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சுப்பிரமணி அவரது மனைவி பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த விபத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கிரேன் எந்திரத்தில் சிக்கி இருந்த மொபட்டை மீட்டனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வயதான தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர்.
    • திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த நம்பியூர் செட்டியாம்பதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கார்த்திக் (22). பாத்திர வியாபாரி. நம்பியூர் அடுத்த எலத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார். இவரது மகன் சங்கர் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    நேற்று இரவு கார்த்திக் மற்றும் சங்கர் 2 பேரும் கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியில் உள்ள கார்த்திக் மாமா ரவிக்குமார் என்பவர் வீட்டுக்கு வந்தனர்.

    அங்கு இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கார்த்திக், சங்கர் ஆகியோர் நம்பியூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்ட பின்னால் சங்கர் அமர்ந்து சென்றார்.

    அவர்கள் கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கார்த்திக் மற்றும் சங்கர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிர்பாராதவிதமாக மாணவர் பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் மோதியது. இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • டிராக்டரின் பின்சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்கதிரேசன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் வெள்ளக்கோவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு பொன் வெற்றி தமிழ் (10), பொன் கவின் தமிழ் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். பொன் வெற்றி தமிழ் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், பொன்கவின் தமிழ் ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பொன் வெற்றி தமிழ் வெங்கமேடு-நாகம நாயக்கன் பாளையம் செல்லும் சாலையில் சைக்கிள்ஓட்டி கொண்டு இருந்தார்.

    அப்போது அந்தவழியாக சங்கர் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் மோதியது. இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது டிராக்டரின் பின்சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் பொன் வெற்றி தமிழ் உடல்நசுங்கி பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிஓடிய டிராக்டர் டிரைவர் சங்கரை தேடி வருகிறார்கள்.

    • கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சோதனைசாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு-சேலம் முக்கிய போக்குவரத்தாக காவிரி ஆற்று பாலம் உள்ளது. இதனால் இந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருந்து வாகனங்களை சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிப்பார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் (48) என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை அற்புதராஜ் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அற்புதராஜ் மீது மோதியது.

    இதில் அற்புதராஜன் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த மற்ற போலீசார் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அற்புதராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மது போதையில் வந்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.
    • விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏ.ஜி.வெங்கடாசலம் (60). இவர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு அந்தியூரில் இருந்து கார் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வந்த கார் பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

    இதையடுத்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
    • பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிளம்பியது. லாரியை சுப்பிரமணி என்பவர் ஓட்டினார்.

    லாரியில் செங்கல் சூலை தொழிலாளர்கள் மணி மற்றும் ஜானகி பயணம் செய்தனர். லாரி ஆப்பக்கூடல் அடுத்த கூத்தம்பூண்டி ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்து கூத்தம்பூண்டி ஏரிக்குள் கவிழ்ந்தது.

    இதில் லாரி டிரைவர் சுப்பிரமணி நீச்சல் அடித்து கொண்டு ஏரியிலிருந்து கரை ஏறினார். பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர். எனினும் முடியவில்லை இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகளை உதவியுடன் மணி, ஜானகி 2 பேரையும் பத்திரமாக ஏரியில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு தயாராக இருந்த 108 மருத்துவ உதவியாளர்கள் கோகுலப்பிரியன், தாமோதரன் ஆகியோர் மணி மற்றும் ஜானகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×