search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona"

    • மாவட்ட நிர்வாகம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா முதல் அலை, 2-வது அலையின்போது ெதாற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நட வடிக்கைகளை கடை பிடித்தனர்.

    மேலும் மாவட்ட நிர்வா கம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. மீண்டும் இந்நோய் தலை தூக்காமல் இருக்க சுகாதார துறை சார்பில் பொதுமக்க ளுக்கு அவ்வபோது பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா சற்று தலை தூக்கியது. சேலத்தில், தின மும் 20, 25 வீதம் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது. அதுபோல் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமாகி வீடு திரும்பி உள்ளார். தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.

    இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.

    இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.

    கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.

    கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு.
    • கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு.

    தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பு எனவும், சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    • இன்று நெல்லை மாவட்டத்தில் யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை
    • தெர்மல் ஸ்கேனர் மூலமாக பயணிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து பரிசோதனை செய்கின்றனர்.

    நெல்லை:

    அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வால் உயிருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இன்று நெல்லை மாவட்டத்தில் யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இந்நிலையில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் ஏற்கனவே முகாமிட்டு தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் தற்போது ரெயில்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

    தெர்மல் ஸ்கேனர் மூலமாக பயணிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதன் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.

    மேலும் சளி பரிசோதனையும் எடுக்க ப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

    • கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தற்போது 7 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1 என்று இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    புதுவையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா தூக்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியிருந்தது.

    கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    காரைக்காலில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 17, காரைக்காலில் 5, ஏனாமில் 14 பேர் என மொத்தம் 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.  

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 127 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
    புது டெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

    அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.
    சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு  லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

    இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " கொரோனா தொற்று உறுதி செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. பாடகர் கே.கே. மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் இருந்து வந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98-ல் இருந்து 139-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 46-ல் இருந்து 58-ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு சிக்சை பெறுவோர் எண்ணிக்கை 542-ல் இருந்து 629-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 52 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு
    தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தென்காசி:

     கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற   நிகழ்ச்சியில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 6 குழந்தைகளுக்கு பிரதரின் பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்க கையேடு, 5 வருடத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை, கல்வி உதவித்தொகை,

    பாதுகாப்பு திட்ட சான்றிதழ், ரூ. 10 லட்சத்திற்கான வைப்புநிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய தொகுப்பை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.

       நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், மா வட்ட குழந்தை பாது காப்பு அலுவலர் சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

    பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    நேற்று ஒரே நாளில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  

    கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நேற்றிரவு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

    தமிழகத்தில் புதிதாக 12 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 89 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,55,376 உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் 74-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 493 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 44 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

    இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×