என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhakrishanan"

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி வளாகம் போன்ற இடங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

    பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    ×