search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commissioner"

    • அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
    • துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது.

    செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் இருந்த அடைப்புகளை அகற்றினார். இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையில் தண்ணீர் வடிந்தது. இதனை கேள்விப்பட்ட மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ஏட்டு ராமனை நேரில் வரவழைத்து பாராட்டினார். துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
    • சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகள் அனைத்தும் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    குப்பைகள் சேகரிப்பு

    மாநகரில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை மட்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணியும் நடைபெறுகிறது.

    இதற்காக வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளர்கள் என 3 வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    போராட்டம்

    இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 550 தூய்மை பணியாளர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தினந்தோறும் காலை 6.10 மணி முதல் தங்களது பணிகளான சாலைகளை சுத்தப்படுத்துதல், வீடுகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.

    ஆனாலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    மாநகராட்சியில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் ஏற்படும் சிரமங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் விதமாக சுயஉதவிக்குழு பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வருகை பதிவு

    அவர்களிடம் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 200 பணியாளர்கள் வரை இன்று பணிக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிக்கே சென்று காலை வருகையை பதிவு செய்துவிட்டு பணிக்கு சென்றுவிடுவார்கள்.

    இதனால் அவர்கள் சீக்கிரமாகவே வீடுகளுக்கு சென்று குப்பைகளை வாங்கி கொள்வார்கள். சில மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு சென்றதும், நேரடியாகவே அங்கு சென்று அவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.

    ஆனால் நெல்லை மாநகராட்சியில் மட்டுமே அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து வருகையை பதிவு செய்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் அந்தந்த பகுதிக்கு சென்று பணியை தொடங்க தாமதமாகிறது.இதனால் குப்பைகளை சேகரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதற்குள் குப்பை லாரிகள் சென்றுவிடுகின்றது.

    இதனால் ஒரு சில இடங்களில் குப்பை சேகரிப்பவர்கள் அந்த குப்பைகளை தீவைத்து எரித்துவிடுவதாக புகார் வருவதால், மற்ற மாவட்டத்தில் உள்ள நடைமுறையை இங்கு அமல்படுத்தி உள்ளோம். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்.

    தூய்மை பணியாளர்களின் வீண் அலைச்சலை குறைக்கவே இந்த முறையை நடைமுறைப்படுத்தி உள்ளோம். தற்போது பணியாளர்கள் அதனை உணர்ந்து படிப்படியாக வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் இன்று முதல் வரி வசூலிப்பு மையங்களில் செலுத்தலாம் என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை மறுசீரமைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டது. அதனால் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட பயனீட்டு கட்டணம் உள்ளிட்டவை வரி வசூல் மையத்தில் செலுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் இன்று முதல் அனைத்து வரி மற்றும் கட்டணங்களை பணமாகவோ, காசோலை மூலமாகவோ செலுத்தலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    எளிய முறையில் வரி மற்றும் கட்டணங்களை https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக கட்டணமின்றி பயன்படுத்தலாம். 4 மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் சேவைகளான சொத்துவரி விதித்தல், காலியிட வரி விதித்தல், பெயர் மாறுதல்கள் செய்தல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்தால் உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    • மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது.
    • ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீசில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த போலீசாரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் வாரியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டவிரோத செயல்கள், ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

    இப்பிரிவு முழுமையாக, போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்ய சமீபத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.இச்சூழலில், ஐ.எஸ்., பிரிவில், அலுவலக, ஸ்டேஷன் பணியை மேற்கொண்டு வந்த நிவாஸ் சக்கரவர்த்தி, ரகுபதி, கணேஷ்குமார், பிரபு, பிரகாஷ், குப்புசாமி, ஜான் பிரவின், சத்யமூர்த்தி, சார்லி என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர், அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார்.
    • மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் போக்குவரத்தை மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார். வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார். நாளை காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    போக்குவரத்து மாற்றம்

    முன்னதாக சுற்றுலா மாளிகையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் அவர் வழி நெடுகிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொள்கிறார்.

    இதனையொட்டி மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் போக்குவரத்தை மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.

    அதன்படி நாளை(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் அனைத்து கனரக வாகனங்களும், தாழையூத்து சர்வீஸ் ரோடு, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் ரோடு, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் சந்திப்பு, சேரன்மகாதேவி ரோட்டில் சுத்தமல்லி விலக்கு, தென்காசி ரோட்டில் கண்டியப்பேரி விலக்கு வழியாக மாநகர பகுதிக்குள் வராமல் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் காலை 8.30 மணி முதல் மற்ற அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகள் மாநகர காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சீனிவாச நகர் சந்திப்பில் இருந்து ஜங்ஷன் செல்லும் வாகனங்கள், ஐ.ஓ.பி. காலனி, ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள நான்குவழி சாலை பாலத்தின் கீழ் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பாதையை பயன்படுத்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பாளை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம். இதேபோல் பாளை பொட்டல் விலக்கில் இருந்து மார்க்கெட் வரும் வாகனங்கள் அனைத்தும் சீனிவாசநகர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலும் சீவலப்பேரி சாலையில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்களும், சந்திப்பு பகுதியில் இருந்து கன்னியாகுமரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தச்சநல்லூர் வழியாகவும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழையபேட்டை கண்டியப்பேரி சாலை வழியாகவும், சுத்தமல்லி விலக்கில் இருந்து கோபாலசமுத்திரம் வழியாக அம்பை ரோட்டுக்கு சென்று வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அண்ணாசாலை, அறிவியல் மையம் வழியாகவும், சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் வாகனங்கள் கலெக்டர் அலுவலக சாலை, மேலப்பாளையம் சிக்னல் வழியாகவும் செல்ல வேண்டும். பாளை பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் வீரமாணிக்கபுரம் சாலை வழியாக மேலப்பாளையம் வந்தடைந்து அங்கிருந்து வடக்கு பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். பாளை தெற்கு பஜாரில் இருந்து சந்திப்புக்கு செல்லும் வாகனங்களும் மேலப்பாளையம் சிக்னல் வழியாகவே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாந்திநகரில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் நான்குவழி சாலை வழியாக சென்றடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போக்குவரத்து மாற்ற அறிவிப்பை நாளை ஒருநாள் மட்டும் நடைமுறைபடுத்த போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பல்லடம் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற கருத்தியல் படி ஏற்றி கொண்டாடுமாறு அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணியில், நகராட்சி ஊழியர்கள், தற்காலிகபணியாளர்கள், மற்றும் கவுன்சிலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேசியக்கொடிகளை பெற்றுக் கொண்டு அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வீடுவீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    • நகராட்சி ஆணையர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 16, 17-வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது 17-வது நகர்மன்ற வார்டு உறுப்பினர் துரை காமராஜ் உடனிருந்தார். மேலும் வார்டுகளில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்."

    • நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளது. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
    • வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு மாநகர பகுதியில் ஓடினாலும் மாநகரப் பகுதி முழுவதுமாகவே தொடர்ந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளது. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

    குடிநீர் தட்டுப்பாடு

    இங்கு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு மாநகர பகுதியில் ஓடினாலும் மாநகரப் பகுதி முழுவதுமாகவே தொடர்ந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் சற்று மந்தமாகவே உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    லாரிகள் மூலம் வினியோகம்

    ஆனாலும் பொதுமக்களின் தேவையை உணர்ந்து மாநகராட்சி சார்பில் சில நேரங்களில் லாரிகள் மூலமாக தெருத்தெருவாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக 35, 36,6,8, 32 உள்ளிட்ட வார்டுகளில் 15 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். இதற்காக மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளித்து வந்த நிலையிலும் இன்னும் குடிநீர் வினியோகம் சீராகவில்லை.

    முற்றுகை

    இந்நிலையில் முறையாக குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தி நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள நீரேற்று நிலையத்தை வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் அங்கு உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.இன்னும் ஒரு சில நாட்களில் குடிநீர் வினியோகம் முழுமையாக சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    மாநகரப் பகுதியில் குறிப்பாக பாளை மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீராகும். பாளை மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் மணப்படை வீட்டில் உள்ள உறை கிணற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். இந்த மணப்படை வீடு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் பாளை மண்டல பகுதி மக்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

    இங்கு போடப்பட்டுள்ள பம்புகள் சுமார் 40 வருடங்கள் பழமையானவை, தற்போது மோட்டார் மற்றும் குழாய்கள் புதிதாக போடப்பட்டிருந்தாலும் உறை கிணறுக்குள் கிடக்கும் தண்ணீரில் உள்ள பம்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

    இது போன்ற பிரச்சினை தற்போது தான் முதல் முறையாக ஏற்பட்டுள்ளது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பழுதடைந்த கருவிகளை வண்ணார்பேட்டையில் ஒரு பட்டையில் சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த யோசனைகளை கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேட்டுள்ளோம்.அதன்படி பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    20 பேர் கொண்ட குழு

    இதற்கிடையே பொதுமக்களின் தேவையை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகளை கொண்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து 9 லாரிகள் மூலம் பாளை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    மணப்படை வீடு பகுதியில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் என சுமார் 20 பேர் கொண்ட குழு கடந்த 2 நாட்களாக பகல் இரவு வராமல் குடிநீர் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகரை சுத்தமாக வைத்து கொள்ள குப்பைகளை தொட்டியில் கொட்ட வேண்டும் என மேயர்-கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீரேற்று தொட்டிகள், மின்மோட்டார்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து இன்று மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து செல்லூர் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் பூங்கா அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட னர்.

    முன்னதாக 34-வது வார்டு அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனி பகுதி களில் தீவிர தூய்மை பணிகள் நடைபெறுவதை அவர்கள் பார்வையிட்டனர். அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காலனியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும், காலனி பகுதியினை தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் அமிர்த லிங்கம், சுரேஷ்குமார் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், கந்தப்பா, சந்தனம், ஆரோக்கிய சேவியர், அலெக்ஸ்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுப்புராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் 444 நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 3ஆயிரத்து 393 பேர் தேர்வு எழுதினர்.

    திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள பிஷப் ஸ்கூல், மற்றும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5.10 மணி வரை என இரு பிரிவாக தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வாளர்கள் குவிந்தனர்.நீண்ட வரிசையில் காத்திருந்த தேர்வாளர்களை போலீசார் தீவிர சோதனை நடத்தி அதன் பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.

    மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×