என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
- கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்து கொண்டார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை தலைவர் ஜான்சிராணி வரவேற்றார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசினார். பெரியத் தாய், கல்லூரி முதல்வர் சுதா, டாக்டர்கள் யசோதா மணி, முருகேசலட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பத்மாவதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தாய்ப்பால் ஊட்டு தல் விழிப்புணர்வு தொடர் பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை உதவி பேரா சிரியர்கள் மகா லட்சுமி மற்றும் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் தெலுங்கர் மன்றம் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. தெலுங்கர் மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வெலம நாயுடு சங்க தலைவர் ஜெயராமன், மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தெலுங்கர் மன்ற பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் முன்னாள் சேர்மன் சுப்புராஜ் மற்றும் கிளானிஸ் மருத்துவமனை இயக்குநர் மது புருஷோத்தமன் கலந்து கொண்டு பேசினார்.
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மகுடாபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் ராணி மங்கம்மாள் பெயரில் கல்லுப்பட்டியில் பெண்கள் கலைக் கல்லூரி நிறுவ வேண்டும். கோடைகால அரண்மனையில் ராணி மங்கம்மாள் சிலை வைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
- இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் இலக்கு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார்.
கல்லூரி முன்னாள் மாணவரும், சிவகாசி தனியார் நிறுவன மனித வள அதிகாரியான தீன தயாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இலக்குகளை நிர்ணயம் செய்வதன் நோக்கம், குறிக்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2-ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமலர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். 2-ம் ஆண்டு மாணவி ஜெய ராசாத்தி நன்றி கூறினார். இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நிகழ்ச்சிக்கான
- கல்லூரியில் வணிகவியல் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
- மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வாழ்த்திப் பேசினார்.
மாணவர் லோகேஷ் வரவேற்றார். விவேகானந்தர் கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்திருந்து வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக முன்னேறுவது குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரங்கராஜ், பியூலா செய்திருந்தனர்.
- அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைவர் வகித்து பேசினார்.
வரலாற்றுத் துறைத் தலைவர் கார்குழலி வரவேற்றார்.
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கிளாபின் பல்கலைக் கழகச் சமூகவியல் பேராசிரியர் முனைவர் சாலமன் செல்வம் கலந்து கொண்டு பாலினச் சமத்து வமின்மையின் தொடக்கமும் அதன் சமூகத்தாக்கமும் ஒரு வரலாற்று அணுகுமுறை என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், மன்னர் சரபோஜி கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் கோவிந்தராஜ், திருச்சி தந்தைப் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சீதாலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கல்லூரியின் தேர்வு நெறியாளர் மலர்விழி, உள்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் பானுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக முனைவர் பூங்கொடி கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். முனைவர் மீனாட்சி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தன்னாட்சி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகியவற்றிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.
- முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் ஈடுபாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலை மையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக இளையான் குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு சிறப்பித் தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தன்னுள் இருக்கின்ற தனித் தன்மையை வெளிக் கொணர்ந்தால் சிகரத்தைத் தொட்டு விட முடியும்.
நீயா நானா என்று போட் டியிடு வதை விட நீயும் நானும் என வாழ்க்கையில் வெல்வதற்கு முதலில் ஒழுக்கம் மிக முக்கியம்.நல்ல ஒழுக்கம் இருக்கும்போது இன்பமான வாழ்க்கை அமையும். தீய ஒழுக்கம் எப் பொழுதும் துன்பத்தையே தரும்.
ஒற்றுமையையும் ஒழுக் கத்தையும் வள்ளுவம் நமக்கு கற்றுத் தருகிறது. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு அதன்படி நடந் தால் உங்களது கனவு நன வாகும் என்றார்.
கல்லூரியின் முன்னாள் மாணவியும், ராமநாதபுரம் தடவியல் துறையின் சார்பு ஆய்வாளருமான வினோதா கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே தன்னம்பிக்கை விடா முயற்சி புகையிலை மற்றும் போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு செந்தில் குமார், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை முதன்மை யர் செல்வ பெருமாள், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக் தாவூத் உள்பட பலர் கலந்து மாணவ, மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி அளித்த னர்.
இந்நிகழ்ச்சி முடிவில் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வ கணேசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர் களும் பெற்றோர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடு களையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர் கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- மாணவர்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
- மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்லூரி வரவேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு இளங்கலை, இளமறிவியல், இளவணிகவியல்.
இளவணிக நிர்வாகவியல் மாணவர்களுக்குப் புத்தொளிப் பயிற்சியில்மா ணவர்களுக்கு கல்லூரியில் எவ்வாறு ஒழுக்கமாக இருக்க வேண்டும் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்மாதவி தலைமை தாங்கினார்.
கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் வேதியியல் துறைத் தலைவர் முனைவர்மீனாட்சிசுந்தரம், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர்குணசேகரன், தேர்வு நெறியாளர்சு ந்தரராசன், இந்தியப் பண்பாடு சுற்றுலாவியல் துறைத் தலைவர்தங்கராசு ஆகியோர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் தனது தலைமை யுரையில் "மாணவர்கள் கல்லூரி நாட்களில் சுதந்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், கல்வியால் மட்டுமே தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும்,
கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களின் கண்ணியமான ஆடைகளை அணிவதோடு உரிய நேரத்திற்கு வரவேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்."
இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
- ஒரே பாட திட்ட முறையை கைவிட கோரி மதுரையில் கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று உண்ணா விரத போராட்டம் நடந்தது. தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல்கலைக்கழக தன்னாட்சி உரிமையை பறிக்கும். மேலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த இது வலிவகுக்கும். தமிழ் நாட்டின் உயர்கல்வியை பாதிக்கும் இந்த பொது பாடத்திட்ட முறையை திரும்ப பெற வேண்டும்.
உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் இணை பேராசிரியர் பணி மேம்பாடு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். பேராசிரியர் பதவி உயர்வுக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்ற விதியில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் அறிமுக விழா நடைபெற்றது
- விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் உப்புபாளையத்தில் உள்ள கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் மனோசாமுவேல் மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கினார். முதலாமாண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஊக்கமூட்டும் விதமாக மாணவிகளிடம் உரையாற்றினர். அதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
- மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்தநிலையில் மாணவர்கள் கல்லூரிக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-
ஒரு வாரத்துக்கு முன்பாகவே மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமுடியை ஒழுங்கான முறையில் திருத்திக்கொண்டு வருதல், ஆடை, அடையாள அட்டை அணிவது உள்ளிட்ட சில நெறிகள் கல்லூரி செயலி வாயிலாக, முதலாமாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டு பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
அதில் நெறிகளை பின்பற்றாமல் இருந்த 50 பேரிடம் அடையாள அட்டை பெறப்பட்டு, தலைமுடிகளை திருத்தி வரவும், முறையான ஆடை அணிந்து வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட பல்வேறு இளநிலை பட்டப் படிப்புக்கான முதலா மாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப் பப் பதிவு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்தது. இக்கல்லூரிகளில் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு நடப்பாண்டு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்பித்தனர்.
விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மே மாதம் 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அதன் பிறகு கலந்–தாய்வு நடை பெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக ளுக்கு அட்மிஷன் ஆணை வழங்கப்பட்டது.
இதனால் சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் செயல்படுடும் 22 அரசு கல்லூரிகளில் இடங்கள் நிரம்பின.
இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர்.
பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் வகுப்பு பேராசி யர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.
இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப் பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்