search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lecture"

    • கல்லூரியில் வணிகவியல் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வாழ்த்திப் பேசினார்.

    மாணவர் லோகேஷ் வரவேற்றார். விவேகானந்தர் கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்திருந்து வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக முன்னேறுவது குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரங்கராஜ், பியூலா செய்திருந்தனர்.

    • அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
    • கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    உயர்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை தொடங்கிய 152-வது ஆண்டு தொடக்கமும், வள்ளல் பெருமான் இந்த உலகிற்கு வருவிக்க உள்ள 200-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் சேர்ந்து முப்பெரும் விழா தமிழக அரசின், உத்தரவுப்படி இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. அகல் விளக்கை டாக்டர் தம்பையா ஏற்றினார். பின்னர் மாநில சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் அருள் நாகலிங்கம், சமரச சித்த சன்மார்க்க சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் சன்மார்க்கக் கொடி கட்டினர் . அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.

    பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சன்மார்க்க பெரியோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளலார் பற்றி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் சூரிய நாராயணன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ( வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பரிசு வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து சன்மார்க்க பெரியோர்கள் கௌரவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர். தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா நன்றி கூறினார்.

    ×