search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student"

    • குடும்ப தகராறில் வேதனையடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி விஸ்வதாஸ்காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மகள் காஞ்சனா(17). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வந்தார். இவரை அதேபகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் இருகுடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி காஞ்சனா சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.

    இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

    பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.

    மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.

    தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜாகிர் உசேன் கல்லூரி மாணவர்க்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் பரிசு மற் றும் சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் பயிலும் மாணவர் விஜயகுமார், சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற ரெட் மாரத்தான் போட்டியில் 10-வது இடம் பெற அவருக்கு ரொக்க பரிசும் பெற்றார். மேலும் காரைக்குடி, கிரீடா பாரதி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் 15-வது இடம் பெற்றார். இந்த 2 போட்டிகளிலும் ரொக்க பரிசு பெற்று வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ்கான் மற்றும் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் பரிசு மற் றும் சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.

    • செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.
    • தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.

    மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி சுய நினைவின்றி அலங்கோலமான நிலையில் நிர்வாணமாக கிடந்தார்.

    அவரது உடலில் காயங்களும் இருந்தன. சுய நினைவின்றி கிடந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி மீட்கப்பட்ட வீட்டில் சில போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த வாலிபர் உள்ளிட்ட சிலர் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், போலீசார் வந்ததும் மாணவியை நிர்வாணமாக போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். ஆகவே தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாயமான கல்லூரி மாணவி, வாலிபரின் வீட்டின் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சேர்ந்தவர் மனோகரன் (59). இவரது மனைவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூ ரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் சவுபர்ணிகா (18) கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சவுபர்ணிகாவுக்கு பொறியியல் படிக்க சிரமமாக இருப்பதாகவும், அதனால் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பு வதாகவும் கூறியுள்ளார்.

    அதற்கு தந்தை மனோகரனும் சம்மதித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் விடுமுறை முடிந்து கல்லூரி செல்வதற்காக பை வாங்கி வருவதற்காக மனோகரன் காலையில் ஈரோடு சென்று விட்டார். அவரது மனைவியும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    ஈரோடு சென்ற மனோகரன் மீ ண்டும் மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்துள்ளது. மகளை சத்தமிட்டு கூப்பிட்டும் வெகு நேரமாக கதவு திறக்கவில்லை.

    இதையத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே யே சவுபர்ணிகா இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர்.
    • மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகரில் சமீப காலமாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணியாதவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என பல்வேறு போக்குவரத்து விதி மீறுபவர்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலத்தில் முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அணைமேடு பாலம், உடையாப்பட்டி பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மறைவான இடத்தில் நின்று கொண்டு தலைகவசம் அணியாதவர்களை விரட்டி விரட்டி பிடித்து வருகிறார்கள்.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போலீசாரிடம் சிக்கினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் தலா 10 பேரை பிடித்து அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    அதன்படி சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர். அதில் சிலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பணம் கையில் இருந்தவர்கள் பணத்தை கட்டிவிட்டு சென்றனர். ஆனால் கையில் பணம் இல்லாதவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து வந்து அபராதத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள் ஆவர்.

    சேலம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்சரா இறக்கம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர வகான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர் ஒருவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதே போல சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி. நேற்றிரவு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பரிசோதனை செய்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அபராதத்தை கட்டி விட்டு போலீஸ் நிலையத்தில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறினர்.

    இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார் . தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சேலம் அர சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அவரை பிரிந்து சென்றதும், நேற்று மனைவியை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை என்று கூறினார்.
    • செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பார்மசி படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் கல்லூரி மாண வன் தூக்கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார். காரைக்கால் அன்பு நகரை சேர்ந்தவர் லூர்து தாஸ். இவருடைய மூத்த மகன் அருள் பெனடிக் (வயது 19). இவர் நாகப்பட்டி னத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வந்தார். இந்நிலையில் அருள் பெனடிக் தனது பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை நண்பர்களோடு சேர்ந்து வேற படிப்பை படிக்க போவதாக கூறினார். அதற்கு அருள்பெனடிக் தந்தை லூர்து தாஸ் வேறு கல்லூரியில் சேர்த்துவிட நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் லூர்து தாஸ் மனைவி மற்றும் 2-வது மகன் யுவராசுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளி யூர் சென்றனர். நிகழ்ச்சிக்கு அருள் பெனடிக்கையும் வருமாறு பெற்றோர் அழைத்தனர். அதற்கு தனக்கு வேலை இருப்பதாக கூறி வீட்டில் இருந்தார். இதனையடுத்து அருள் பெனடிக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை லூர்துதாஸ் பெனடிக்கின் செல்போனிற்கு அழைத்த போது அது சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக வந்தது. இதனால் அருள் பெனடிக்கின் நண்பர்களை தொடர்பு ெகாண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார். 

    அதன்படி அருள்பெனடி க்கின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து போது அருள் பெனடிக் தூக்கில் பிணமாக தொங்கி யதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டின் கதவை உடைத்து அருள்பெனடிகின் நண் பர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அருள்பெனடிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு பெனடிக்கை பரிசோ தித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினார். இது குறித்து காரைக்கால் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (19). இவர் மதுரையில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் இவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அஸ்வினிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் அஸ்வின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.புதூர் சம்பக்குளம் ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி அம்ரிதா (30). இவர் தனது ஸ்கூட்டரில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குழந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென அம்ரிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் அம்ரிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேனியல்பாபு, அந்தோணியம்மாள் கூலி வேலை செய்து வருகி ன்றனர்.
    • வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த டேனியல்பாபு, அந்தோணியம்மாள். கூலி வேலை செய்து வருகி ன்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். முதல் 2 பெ ண்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது பெ ண்ணான ஆஷா (19). இவர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியி ல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று பெற்றோருடன் வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஷாவை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஆஷாவை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
    • புகாரின்பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி ஸ்ரீராம் நகர் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகள் கனிமொழி (வயது 19). தந்தை இறந்து விட்ட நிலையில் குணா என்பவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்காத தால் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவரை கடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் முகேஷ் (வயது 19). இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார். செல்லம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகேஷ். இவரும் முகேஷும் நண்பர்கள்.

    முருகேசுக்கும், சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த கிடாய் என்ற ரஞ்சித்குமாருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இது தொடர்பான பிரச்சினையில் முகேஷ் தனது நண்பருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் முகேஷை தாக்க திட்டமிட்டார். நேற்று காலை முகேஷ் தென்றல் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷை கடத்தி அங்குள்ள ஹாக்கி மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ரஞ்சித்குமார், அவரது நண்பர்கள் மணிசங்கர், துரைப்பாண்டி, முத்தையா, ராஜலிங்கம் ஆகிய 5 பேர் பீர் பாட்டிலால் முகேஷ் மண்டையை உடைத்தனர். மேலும் உருட்டு கட்டையால் சரமாரி யாக அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் உள்பட 5 பேரை தேடி வருகின்றார்.

    • ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, விவசாயி. இவருக்கு ரோகிணி (வயது 19) என்ற மகள் உள்ளனர். ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி ரோகிணி கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரோகிணியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகிணியின் சகோதரர் ராஜகுரு சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாணவி ரோகிணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×