விரும்பிய தின்பண்டங்கள் வாங்கி தராததால் பிறந்த நாளில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி

மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரும்பிய தின்பண்டங்கள் வாங்கி தராததால் பிறந்த நாளில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.

இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.

மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.

தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com