search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parents complaint"

    • டேனியல்பாபு, அந்தோணியம்மாள் கூலி வேலை செய்து வருகி ன்றனர்.
    • வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த டேனியல்பாபு, அந்தோணியம்மாள். கூலி வேலை செய்து வருகி ன்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். முதல் 2 பெ ண்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது பெ ண்ணான ஆஷா (19). இவர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியி ல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று பெற்றோருடன் வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஷாவை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஆஷாவை தேடி வருகின்றனர்.

    செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுபட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45) விவசாயி. இவரது மனைவி பிரியா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை பிரியா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வெங்கடேசன் பிரியாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வெங்கடேசனின் வீட்டுக்கு வந்து பிரியாவில் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதில் பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தஞ்சை அருகே பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பஞ்சநதிக் கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி மேல உளூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

    பின்னர் மாலை நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்கு வரவில்லை. உடனே அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை.

    இதைத் தொடர்ந்து பக்கத்து ஊருக்கு சென்று மகளின் தோழிகளிடம் கேட்டனர். அப்போது உங்கள் மகள் இன்று காலை பள்ளிக்கு வரவே இல்லை என்று அவரது தோழிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு எங்கு சென்றார்? காதல் விவகாரத்தில் காணாமல் போனாரா? இல்லை யாரும் கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கல்லூரி மாணவருடன் மோதலில் ஈடுபட்ட என் மகனை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று மாணவரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    திருவொற்றியூரை சேர்ந்தவர் பாரதி. டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 22).

    2014-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மணிகண்டன் படிப்பை முடித்து விட்டு மணலியில் உள்ள பெட்ரோலிய கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வேறொரு கல்லூர் மாணவருடன் மோதலில் ஈடுட்டு வந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டு மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ந் தேதி மணிகண்டனை சென்ட்ரல் ரெயில் நிலையம அருகே ஏழுகிணறு போலீசார் கைது செய்தனர். அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று அழைத்து சென்றனர்.

    சுமார் 50 நாட்கள் ஜெயிலில் இருந்த மணிகண்டன் வெளியே வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மணிகண்டனிடன் தாய் பாரதி கூறியதாவது:-

    எனது மகன் கல்லூரியில் படித்த போது கடந்த ஆண்டு காமராஜர் சாலையில் மாநகர பஸ் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் அவனை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.

    அந்த சம்பவத்தில் அவனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தான். அதன் பிறகு ஜாமீனில் வந்த அவன் பெட்ரோலிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.

    கடந்த ஜூன் 18-ந் தேதி ஏழுகிணறு போலீசார் எங்களுக்கு போன் செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்தனர். உடனே நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து சென்றோம். அங்கு என் கண் முன்னேயே மணிகண்டனை போலீசார் தாக்கினார்கள். நான் போலீசாரை சமாதானப்படுத்தினேன்.

    எனது மகன் முழுமையாக மாறிவிட்டான். தற்போது அவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறான் என்று கூறினேன். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கு பின்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவன் மிகவும் சோகத்துடன் இருந்தான். குடும்பத்தின் பெயரை கெடுத்து விட்டதாக கூறி வேதனைப்பட்டான்.

    நான் ஒருமுறை தவறு செய்துவிட்டதாகவும், அதை வைத்து என்னை தவறாக சித்தரித்து விட்டனர். போலீசார் தனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறினான்.

    நாங்கள் அவனை சமாதானப்படுத்தினோம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறினார்.

    ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டன் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். போலீசார் யாரையும் ஆதாரம் இல்லாமல் கைது செய்வதில்லை.

    ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர் அதன்பிறகு தவறு செய்யவில்லை என்றால் அவரை விட்டுவிடுவோம் என்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தை அடுத்த கொங்கராயனூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கார் டிரைவர். இவரும், அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த கவிப் பிரியா (24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சுதியன் என்ற மகன் உள்ளான்.

    நேற்று சவாரிக்காக காரில் வீரக்குமார் வெளியூருக்கு சென்றிருந்தார். வீட்டில் தனிமையில் இருந்த கவிப்பிரியா திடீரென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வீரக்குமாருக்கும், கவிப்பிரியாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனே கவிப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொங்கரையானூர் வந்தனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய கவிப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று கவிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து கவிப்பிரியாவின் பெற்றோர் போலீசில் அளித்துள்ள புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மாணவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ காட்சி கடந்த வாரம் வேகமாக பரவியது. இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி பழனி கல்வி மாவட்ட அலுவலர் கருப்புசாமிக்கு, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளிக்கு நேரில் சென்று கருப்புசாமி விசாரணை நடத்தினார். பின்னர், முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமாரும் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவன், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவனுடன் அவனது பெற்றோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் மாணவனின் தந்தை கூறியிருப்பதாவது:-

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனது மகனை ஆசிரியர் ஒருவர் ஓய்வு அறைக்கு அழைத்து சென்று, அவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பள்ளிக்கு சென்ற எனது மகனை சக மாணவர்கள் ‘எனக்கும் மசாஜ் செய்துவிடு’ என்றுகூறி கேலி செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவன் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்கிறான்.

    இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் எனது மகனை அழைத்து மசாஜ் செய்தது நாடகத்திற்காக எடுக்கப்பட்ட ஒத்திகை என்று கூறுமாறும், இல்லையென்றால் உன்னை பள்ளியில் படிக்க விடமாட்டேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

    இதனால், அவன் பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறான். எனது மகனின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு கவலையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×