search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beaten"

    • பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.
    • மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி - கபிலர்மலை சாலையில் வசிப்பவர் ராஜா (வயது 44). டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (49), கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    கல்லால் தாக்கினார்

    கடந்த 27-ந் தேதி, இருவரும் பரமத்தி அருகே உள்ள பில்லூர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது.

    இதனிடையே ராஜாவை கல்லால் தாக்கிய கோவிந்தன் மீது பரமத்தி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    சிகிச்சை பலனின்றி...

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் இறந்துவிட்டதால் காளியம்மாள் மட்டும் தனியாக இருந்து வந்தார்.
    • அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள துப்பாக்குடி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காளியம்மாள் (வயது 67).

    இவர்களது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஆறுமுகம் இறந்துவிட்டதால் காளியம்மாள் மட்டும் தனியாக இருந்து வந்தார்.

    நேற்று காலை இவர் அரிவாளுடன் காட்டு பகுதியில் விறகு எடுக்க சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அக்கம் பக்கத்தினர் காட்டு பகுதிக்கு சென்று காளியம்மாளை தேடி பார்த்தனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பனங்காட்டு பகுதியில் காளியம்மாள் பிணமாக கிடந்தார்.

    உடனே ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காளியம்மாளின் காது பகுதியில் இருந்து ரத்தம் வடிந்தது. அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் இருந்து நகைகளை பறிப்பதற்காக மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் சிகிச்சை பலன் இன்றி இறந்தான். #SchoolTeacher #Student
    பாண்டா:

    உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வயது மாணவன் அர்பஜ் என்பவனை ஆசிரியர் ஜெய்ராஜ் கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தான்.

    இது குறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் ஆசிரியர் ஜெய்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கல்லூரி மாணவருடன் மோதலில் ஈடுபட்ட என் மகனை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று மாணவரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    திருவொற்றியூரை சேர்ந்தவர் பாரதி. டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 22).

    2014-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மணிகண்டன் படிப்பை முடித்து விட்டு மணலியில் உள்ள பெட்ரோலிய கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வேறொரு கல்லூர் மாணவருடன் மோதலில் ஈடுட்டு வந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டு மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ந் தேதி மணிகண்டனை சென்ட்ரல் ரெயில் நிலையம அருகே ஏழுகிணறு போலீசார் கைது செய்தனர். அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று அழைத்து சென்றனர்.

    சுமார் 50 நாட்கள் ஜெயிலில் இருந்த மணிகண்டன் வெளியே வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மணிகண்டனிடன் தாய் பாரதி கூறியதாவது:-

    எனது மகன் கல்லூரியில் படித்த போது கடந்த ஆண்டு காமராஜர் சாலையில் மாநகர பஸ் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் அவனை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.

    அந்த சம்பவத்தில் அவனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தான். அதன் பிறகு ஜாமீனில் வந்த அவன் பெட்ரோலிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.

    கடந்த ஜூன் 18-ந் தேதி ஏழுகிணறு போலீசார் எங்களுக்கு போன் செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்தனர். உடனே நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து சென்றோம். அங்கு என் கண் முன்னேயே மணிகண்டனை போலீசார் தாக்கினார்கள். நான் போலீசாரை சமாதானப்படுத்தினேன்.

    எனது மகன் முழுமையாக மாறிவிட்டான். தற்போது அவன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறான் என்று கூறினேன். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கு பின்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவன் மிகவும் சோகத்துடன் இருந்தான். குடும்பத்தின் பெயரை கெடுத்து விட்டதாக கூறி வேதனைப்பட்டான்.

    நான் ஒருமுறை தவறு செய்துவிட்டதாகவும், அதை வைத்து என்னை தவறாக சித்தரித்து விட்டனர். போலீசார் தனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறினான்.

    நாங்கள் அவனை சமாதானப்படுத்தினோம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறினார்.

    ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டன் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். போலீசார் யாரையும் ஆதாரம் இல்லாமல் கைது செய்வதில்லை.

    ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர் அதன்பிறகு தவறு செய்யவில்லை என்றால் அவரை விட்டுவிடுவோம் என்றனர்.

    குஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
    ராஜ்கோட்:

    குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் முகேஷ் வனியா என்ற தலித் வாலிபர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தார். அங்குள்ள ரடாடியா கம்பெனி அருகே அவர்கள் இந்த பணியை செய்து கொண்டிருந்த போது, அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜெய்சுக் ரடாடியா மற்றும் 4 பேர் சேர்ந்து முகேஷ் வனியாவை பிடித்தனர்.

    பின்னர் அவர்கள், கணவன்-மனைவி இருவரும் திருட வந்ததாக நினைத்து முகேஷை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக அடித்தனர். இந்த காட்சிகளை அவர்கள் தங்கள் செல்போனில் பதிவும் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முகேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெயாபென் ராஜ்கோட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    திருடன் என நினைத்து தலித் வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×