என் மலர்
நீங்கள் தேடியது "tag 117091"
மயிலாடுதுறை அருகே தன் மனைவியிடம் பேசியதை கண்டித்த டிரைவரை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கூறைநாடு தூக்கணாங்குலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாமியப்பன். லாரி டிரைவர் (வயது 52). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பு ஆனதாண்டவபுரம் ரோடு அருகே உள்ள தெருவில் வசித்து வந்துள்ளார். அதை விற்பனை செய்துவிட்டு தூக்குனாங்குலத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்துள்ளார்.
இவர் வீட்டுக்கு அருகே அவருடைய தம்பி வீரமணியும் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரமணியின் மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்குசென்று விட்டாராம்.
தன் மனைவியிடம் நீ ஏன் அடிக்கடி தனிமையில் பேசுகிறாய் என சந்தேகப்பட்டு வீரமணியிடம் சாமியப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி அண்ணன் சாமியப்பனை தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த விழுந்த சாமியப்பனை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி அனுப்பி வை த்தனர். ஆனால் வழியிலேயே சாமியப்பன் பரிதாபமாக இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்து, மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் பிற மாணவர்களுடன் வெளியே உல்லாசப்பயணம் சென்றிருந்தான். அப்போது அந்த மாணவன் பிஸ்கெட்டை திருடியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தண்டனையாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அந்த குறிப்பிட்ட மாணவனை பள்ளிக்கூடத்தில் வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவன் சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவனது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அந்த மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்து விட்டனர். இதில் பள்ளி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் 10-ந் தேதி நடந்துள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவனத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து பள்ளி மேலாளர், வார்டன், விளையாட்டு ஆசிரியர், 2 மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரூர் அருகே வீட்டில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாராவது அடித்துக் கொன்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலையை அடுத்த ஆண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி கெங்கம்மாள் (வயது 65). இவர்களுக்கு பழனியம்மாள் என்ற மகள் உள்ளார். ராஜமாணிக்கம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
பழனியம்மாள் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கெங்கம்மாள் நேற்று காலை வீட்டின் உள்ள ஆடுகளை அடைத்து வைக்கும் பட்டியின் அருகே தலை, மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே மகள் பழனியம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து கெங்கம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து பழனியம்மாள் கோட்டப்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கெங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கெங்கம்மாளை முன் விரோதம் காரணமாக யாராவது அடித்து கொன்றனரா? அல்லது மர்ம நபர்கள் கெங்கம்மாளை அடித்து கொன்றுவிட்டு உடலை வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
ராஜ்கோட்:
குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் முகேஷ் வனியா என்ற தலித் வாலிபர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தார். அங்குள்ள ரடாடியா கம்பெனி அருகே அவர்கள் இந்த பணியை செய்து கொண்டிருந்த போது, அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜெய்சுக் ரடாடியா மற்றும் 4 பேர் சேர்ந்து முகேஷ் வனியாவை பிடித்தனர்.
பின்னர் அவர்கள், கணவன்-மனைவி இருவரும் திருட வந்ததாக நினைத்து முகேஷை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக அடித்தனர். இந்த காட்சிகளை அவர்கள் தங்கள் செல்போனில் பதிவும் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முகேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஜெயாபென் ராஜ்கோட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
திருடன் என நினைத்து தலித் வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.