search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student missing"

    காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வடக்கு கஞ்ச கொல்லை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் வசந்தராணி (வயது17).

    இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை

    இதை தொடர்ந்து வசந்த ராணியின் தாய் வசந்தா காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தராணியை தேடிவருகிறார்.

    கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயமானதால் அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சாந்தி (வயது 28). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சாந்தி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி சாந்தி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.

    இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையத்தில் பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கண்டியானூர், கந்தசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் . இவரது மகள் ஜனனிஸ்ரீ (வயது15). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.  

    இந்நிலையில் மறுதேர்வு எழுதுவதற்காக வேலாயுதம்பாளையம்- கொடுமுடி சாலையில் உள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் கடந்த 1-ந் தேதி சேர்ந்தார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் முருகனும் அவரது உறவினர்களும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் ஜனனிஸ்ரீ கிடைக்கவில்லை.

    இது குறித்து முருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து ஜனனிஸ்ரீயை எவரேனும் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது கணிதபாட தோல்வி பயத்தில் எங்கும் சென்று விட்டாரா? என பல கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முசிறியில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    முசிறி:

    தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (18). முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம்ஆண்டு படித்து வருகிறார். 

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அபிநயா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் தனது உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் அபிநயா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து முசிறி போலீசில் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
    வேலாயுதம்பாளையத்தில் மாயமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயு தம்பாளையம் காந்திநகர், 6-வது  தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகள் பரிமளா (வயது 18). இவர் புன்னம்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருந்து உள்ளார். கணேசனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. மகளை காணவில்லை.  

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பரிமளாவின் தோழிகள் வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் பரிமளாவை  கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பரிமளாவின் தந்தை கணேசன்    வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து பரிமளாவை எவரேனும் கடத்தி சென்றுவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் உள்ள திருவனந்தபுரம் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருடைய மகள் பவானி (வயது21). தனியார் கல்லூரியில் படித்து முடித்த இவர், அதற்கான சான்றிதழை வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    அதன் பிறகு பவானி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ராஜபாளையம் தெற்கு போலீசில் தெய்வேந்திரன் புகார் செய்தார்.

    ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மனைவி பெத்தனாட்சி செல்வி (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெத்தனாட்சி செல்வி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் ராஜபாளையம் தெற்கு போலீசில் முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான பவானி மற்றும் பெத்தனாட்சி செல்வியை தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் தேவிகா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    கடந்த 16-ந் தேதி வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி இளங்கோவன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதில் தனது மகளை மன்னார்குடியைச் சேர்ந்த கபாலி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று கந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி தேவிகாவை தேடி வருகின்றனர்.

    வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவருடைய மகள் திவ்ய பாரதி (வயது 20).

    இவர், கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி திவ்ய பாரதி வீட்டில் தனியார் இருந்தார்.

    அவருடைய பெற்றோர் கடைக்குச் சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் திவ்யபாரதி இல்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

    இது குறித்து கேணிக்கரை போலீசில், திவ்யபாரதியின் தாயார் பாண்டியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவரத்தினம் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்ய பாரதியை தேடி வருகிறார்.

    ×