என் மலர்
நீங்கள் தேடியது "college student missing"
பாகூர்:
புதுவை தவளக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் புதுவை கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுகன்யா (வயது21). இவர் பாக்குமுடையான்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் சுகன்யா கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் சுகன்யா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சுகன்யாவை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கும் சுகன்யா இல்லை.
இதையடுத்து குணசேகரன் தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சுகன்யாவை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தகினிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சர்மிளா (19). இவர் கொழுந்துலூரில் உள்ள தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வருகிறார்.
கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்ற சர்மிளா மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சர்மிளாவின் தாய் கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரண்வாயல் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (27). காது மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி. குன்றத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந் தேதி வேலைக்கு சென்ற நந்தினி மாயமானார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோமதி (21). கடந்த 12-ந் தேதி ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி புகாரின் பேரில் மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மகள் சுஷ்மிதா. (வயது 19). இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-வது ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து சுஷ்மிதா தனது தோழிகளுடன் வீட்டுக்கு செல்ல சேதராப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது சுஷ்மிதா திடீரென மாயமானார்.
வெகு நேரமாக சுஷ்மிதா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சுஷ்மிதா இல்லை.
இதையடுத்து அவரது தாய் ஜோதி தனது மகள் மாயமானது குறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சுஷ்மிதா காதல் வலையில் விழுந்து காதலனோடு சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பரதர் உவரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகள் நிரோஷா (வயது 21). இவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி நிரோஷா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால், நேற்று அவரது தாயார் ஜெனி உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நிரோஷாவை தேடி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலகுளம் கீழுரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வாசுதேவகி (வயது 33). இவர் வல்லநாடு அருகே உள்ள ஒரு தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26-ந் தேதி வேலைக்கு சென்ற வாசுதேவகி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால், அவரது தாயார் நாச்சியார் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் அகிலா (வயது 19). இவர் வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பாண்டியன் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அகிலாவை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது காதல் வலையில் சிக்கி மாயமானாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வடக்கு கஞ்ச கொல்லை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் வசந்தராணி (வயது17).
இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை
இதை தொடர்ந்து வசந்த ராணியின் தாய் வசந்தா காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தராணியை தேடிவருகிறார்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சாந்தி (வயது 28). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சாந்தி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி சாந்தி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.
இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.
இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.