search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velayuthampalayam"

    வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆம்னிகாரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் மூட்டைகள் இருந்தது. மணல் மூட்டைகள் கொண்டு வருவதற்கான அனுமதி சீட்டை கேட்டனர். அப்போது காவிரி ஆற்று பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து புஞ்சை கடம்பன்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் (34), கேசவன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து, ஆம்னி காரை பறிமுதல் செய்தனர்.

    வேலாயுதம்பாளையம் அருகே மறவாபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    சின்னதாராபுரம் அருகே நடுப்பாளையத்தைசேர்ந்தவர் ராஜகுமாரன்(வயது 24). இவர் கரூரில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று காலை ராஜகுமாரன் பஸ்சில் வேலாயுதம்பாளையம் அருகே மறவாபாளையம் வந்தார்.

    அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள கருப்பம்பாளையத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார்.

    அப்போது ஆற்று தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறவாபாளையம் காவிரி ஆற்றில் ராஜ குமாரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கட்டிபாளையம் அருகே ராஜகுமாரன் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்
    வேலாயுதம்பாளையத்தில் பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கண்டியானூர், கந்தசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் . இவரது மகள் ஜனனிஸ்ரீ (வயது15). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.  

    இந்நிலையில் மறுதேர்வு எழுதுவதற்காக வேலாயுதம்பாளையம்- கொடுமுடி சாலையில் உள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் கடந்த 1-ந் தேதி சேர்ந்தார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் முருகனும் அவரது உறவினர்களும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் ஜனனிஸ்ரீ கிடைக்கவில்லை.

    இது குறித்து முருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து ஜனனிஸ்ரீயை எவரேனும் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது கணிதபாட தோல்வி பயத்தில் எங்கும் சென்று விட்டாரா? என பல கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலாயுதம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது ஆட்டோ மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் அருகே வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசம்மாள் (61). இவர் நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையம்  உழவர் சந்தை அருகே சாலையை கடந்த போது வேலாயுதம் பாளையத்திலிருந்து வேகமாக வந்த ஆட்டோ ராசம்மாள் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ராசம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி  வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராசம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலாயுதம்பாளையத்தில் மாயமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயு தம்பாளையம் காந்திநகர், 6-வது  தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகள் பரிமளா (வயது 18). இவர் புன்னம்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருந்து உள்ளார். கணேசனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. மகளை காணவில்லை.  

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பரிமளாவின் தோழிகள் வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் பரிமளாவை  கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பரிமளாவின் தந்தை கணேசன்    வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து பரிமளாவை எவரேனும் கடத்தி சென்றுவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×