என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்: கடத்தலா என விசாரணை
    X

    வேலாயுதம்பாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்: கடத்தலா என விசாரணை

    வேலாயுதம்பாளையத்தில் மாயமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயு தம்பாளையம் காந்திநகர், 6-வது  தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகள் பரிமளா (வயது 18). இவர் புன்னம்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருந்து உள்ளார். கணேசனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. மகளை காணவில்லை.  

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பரிமளாவின் தோழிகள் வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் பரிமளாவை  கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பரிமளாவின் தந்தை கணேசன்    வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து பரிமளாவை எவரேனும் கடத்தி சென்றுவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×