search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Musiri"

  முசிறி அருகே விபத்தில் வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  முசிறி:

  முசிறி செவந்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (35). இவர் திருச்சி-சேலம் சாலையில் செவந்தலிங்க புரம் காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி வேதாத்திரி நகரை சேர்ந்த பத்தையக்கான் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக பிரபு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

  இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  முசிறி அருகே வீரமணிப்பட்டியில் வீடுபுகுந்து பட்டபகலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 58 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  முசிறி:

  முசிறி அடுத்த வீரமணிப்பட்டி கிராமத்தில் பார்த்தீபன் என்பவரது வீட்டில் பட்டபகலில்  பூட்டை உடைத்து உள்ளே சென்ற இளம்பெண் லதா (34) திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்தீபன் பெண் ஒருவர் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

  அப்போது அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் அந்தபெண் மூலம் தப்பிஓடிய வாலிபருக்கு போன் செய்து வரவழைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபர் அந்த பெண்ணின் கணவர் திருச்சியை சேர்ந்த ரெங்கநாதன் (30) என்பதும், அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 

  மேலும் கணவன் மனைவி இருவரையும் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்ததில் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்கு சென்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடுவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முசிறி, துறையூர், தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் லதா மூலம் நகைகளை பல்வேறு இடங்களில் அடகு மற்றும் விற்கப்பட்டிருந்த 58 பவுன் நகைகளை போலீசார் மீட்டு, இருவரையும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கணவன்,மனைவி இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
  முசிறியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

  முசிறி:

  முசிறி துணைமின் நிலையத்தில் மின்நிறுத்தம் சம்பந்தமாக செயற் பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  முசிறி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பதால் முசிறி, சிங்கார சோலை, பார்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுசிங்யூனிட், தண்டலைப் புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பலாம் பட்டி, வடுகப் பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாச நல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப் பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 2-6-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

  முசிறியில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
  முசிறி:

  தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (18). முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம்ஆண்டு படித்து வருகிறார். 

  இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அபிநயா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் தனது உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் அபிநயா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

  இதையடுத்து முசிறி போலீசில் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
  முசிறி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  முசிறி:

  முசிறி அடுத்த கீழவடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயசேகரன் (58). இவர் முசிறியில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த விஜயசேகரன் நேற்று தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

  சம்பவம் குறித்து விஜயசேகரன் மகன் தீபன்ராஜ் முசிறி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிந்து தற்கொலை செய்து கொண்ட விஜயசேகரன் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். 

  அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
  முசிறி அருகே மொபட்டில் சென்ற முதியவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.
  முசிறி:

  முசிறி அடுத்த ஏவூர் அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (60) தொழிலாளி. இவர் கடந்த 1-ம் தேதி தனது மொபட் வண்டியில் முசிறிக்கு வந்தவர் வேலைகள் முடித்து கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். 

  அப்போது முசிறி அருகே பெரமூர் அய்யனார்கோவில் அருகில் மொபட் வண்டியில் சென்று கொண்டிருந்த துரைராஜ் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். 

  இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த வரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  துரைராஜ் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  முசிறி அடுத்தசாமி கும்பிட சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம வாலிபர்கள் செயினை பறித்து சென்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  முசிறி:

  முசிறி அடுத்த பெரமூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார். இவரது மனைவி அமராவதி (38). இவர் நேற்று மாலை திருவிழா நடைபெற்று வரும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அமராவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.   

  இது குறித்து செந்தில்குமார் முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 
  ×