search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruthuraipoondi"

    திருத்துறைப்பூண்டி அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியிலிருந்து செம்போடை நோக்கி ஒரு தனியார் பேருந்தும், இதேபோல வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. 2 பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கட்டிமேடு அருகே உள்ள தேவர் பண்ணை என்ற இடத்தில் வந்த போது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாண்டியன்( வயது 42), காடுவாகுடியை சேர்ந்த பாலகவுரி(40), வாட்டாரை சேர்ந்த சத்யா(40), வெள்ளிகிடங்கு பகுதியை சேர்ந்த ருக்மணி(30) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள்- பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ராயநல்லூர் புழுதிக்குடி சாலையில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் திருக்களாரை சேர்ந்த முருகானந்தம்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். பள்ளிவர்த்தியை சேர்ந்த அருள்ஜோதி(40), மீனம்பநல்லூரை சேர்ந்த ராஜா ஆகிய 2 பேரும் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். இதே போல் மற்றொரு கடையில் ஆதிச்சபுரத்தை சேர்ந்த ஜீவா(47) மேற்பார்வையாளராகவும், ஓவரூரை சேர்ந்த கரிகாலன்(41), பாமணியை சேர்ந்த லெனின்(43) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு 2 டாஸ்மாக் கடைகளையும் பூட்டி வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று பகலில் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது டாஸ்மாக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 கடைகளிலும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ. 11 ஆயிரமும் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது தொடர்பாக 2 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மின் இணைப்பு வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஏராளமான தென்னை மரங்கள், மின்கம்பங்கள் கஜா புயலில் சாய்ந்தன.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும், அடிப்படை வசதியான குடிநீர், உணவு, மின்சாரம் கேட்டும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சி, தோப்படித்தெருவில் உள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருத்துறைப்பூண்டியை அடுத்த பாமணி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மின்வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரரவி (வயது52). இவருக்கு மரகதவள்ளி (43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொல்லையில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று கஜா புயலில் வீரரவியின் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீர ரவி தனதுகுடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார்.

    இந்த நிலையில் தென்னை மரங்கள் போய் விட்டதே. இனி என்ன செய்ய போகிறேன் என்று தெரிய வில்லையே என்று வீரரவி வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

    இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தை 2 தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி மாரடைப்பால் இறந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Gajastorm

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது. தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரியநாயகிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓரு சில ஓட்டு வீடுகளை தவிர அனைத்துமே கூரை வீடுகள் ஆகும். நேற்று மதியம் 1 மணியளவில் இந்த பகுதியில் உள்ள குருமூர்த்தி(வயது 50) என்பவர் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.



    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சிவகுமார், தங்கையன், முத்துக் கிருஷ்ணன், பாலு, ராஜூ, சாமிக்கண்ணு, குமர கண்ணன், விவேகானந்தன், நாகராஜன், ராஜப்பன், அய்யப்பன், மணிகண்டன் சிவபாலன், பக்கிரிசாமி, மெய்க்கண்டவேல், மகேந்திரன், சண்முகம், குபேஸ்குப்தா, ராஜேந்திரன், ராஜீவ்காந்தி, வடிவேலு, இந்திரா, அண்ணாத்துரை, கருணாநிதி, பொதியப்பன், வாசுகி, ராமசாமி, பாஸ்கர், ரமணி, தங்கவேல், வைரக்கண்ணு, சித்ரவேல், பரசுராமன் ஆகியோரது வீடுகள் உள்பட 45 வீடுகள் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து ஏற்பட்டபோது அங்குள்ள வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர வெடிச் சத்தம் ஏற்பட்டது. அப்போது அங்கு தீயை அணைத்துக் கொண்டு இருந்த நெடும் பாலத்தை சேர்ந்த ராஜூ(48) தலையில் வெடித்த சிலிண்டரின் ஒரு பகுதி வந்து விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 50்-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அனைத்து வீடுகளும் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வராமல் கால தாமதமாக வந்ததால் தான் அனைத்து வீடுகளும் முழுமையாக எரிந்ததாகக் கூறி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த நகை, பணம், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ, துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாச மானது. சேத மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து திருத் துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ், தாசில்தார் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டது. 
    திருமணமாகி 2-வது வாரத்தில் கணவனே தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செட்டிமூலையை சேர்ந்தவர் வீராசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி . இவர்களுக்கு லட்சுமி (வயது 23) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் வீராசாமியின் மகள் லட்சுமிக்கும் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேந்திரனுக்கும் (26) கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மணமகள் லட்சுமி வீட்டில் விருந்து முடிந்து வீடு திரும்பிய போது, ராஜேந்திரன் லட்சுமியிடம் இருந்து கம்மலை வாங்கி அடமானம் வைத்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அன்று இரவு 11 மணியளவில் மனைவி லட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் விட்டு விட்டு ராஜேந்திரன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி சுமார் 2 மணியளவில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது தன்னை 2 நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி கணவரிடம் சண்டை போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், ‘‘இந்த வி‌ஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி மனைவியை ராஜேந்திரன் விடிய விடிய தாக்கியதாக தெரிகிறது. மேலும் லட்சுமியின் முகத்தை உரலை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கு முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து லட்சுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர்களும், மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் லட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருமணமான 2-வது வாரத்தில் புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந் தாக்கிய கணவர் ராஜேந்திரன் குறித்து தலை ஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தலைஞாயிறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
    திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலை தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மகள் உமா(வயது 20). இவர் கட்டிமேட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அதே தெருவை சேர்ந்த முருகையன் மகன் வெற்றிவேலுக்கும்(25), உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம், பக்கத்தினர் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு உமா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வெற்றிவேல் மற்றும் அவருடைய நண்பர்களான சுந்தரபாண்டி(22), கோகுல்(22) ஆகியோர் உமாவின் உறவினரான வடபாதியை சேர்ந்த கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த உமா, வெற்றிவேல் உள்ளிட்ட 3 பேரிடமும், எனது உறவினரிடம் என்ன பேசினீர்கள்? என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாவை தாக்கினர்.

    இதில் காயமடைந்த உமா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.

    போலீசார் தங்களை தேடுவதை அறிந்த வெற்றிவேல் உள்பட 3 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து கழிவறையை சுத்தம் செய்யும் ‘ஆசிட்’டை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் குறைந்த விலைக்கு சவாரி ஏற்றி சென்ற வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் முகமது நசீர் (வயது 26). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியில் ஜெயகாந்தன் என்பவரும் வேன் ஓட்டி வருகிறார். 

    இந்த நிலையில் ஜெயகாந்தனுக்கு வந்த ஒரு சவாரியை முகமதுநசீர் குறைந்த கட்டணத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முகமதுநசீர் திரும்பி வந்ததும், ஜெயகாந்தன் மற்றும் 15 பேர் கும்பல் முகமதுநசீரை தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மெடிக்கலுக்குள் முகமதுநசீர் சென்றுள்ளார். அங்கும் சென்று அவரை தாக்கியதுடன், மெடிக்கலில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. 

    இதுபற்றிய புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுப்பட்ட கமாலுதீன், மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஜெயகாந்தன், அம்பிகாபதி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் தேவிகா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    கடந்த 16-ந் தேதி வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி இளங்கோவன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதில் தனது மகளை மன்னார்குடியைச் சேர்ந்த கபாலி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று கந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி தேவிகாவை தேடி வருகின்றனர்.

    ×