என் மலர்
நீங்கள் தேடியது "van driver"
- ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பூர் :
திருப்பூர் பி.என் ரோடு சாந்தி தியேட்டர் அருகில் வேன் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான வேனை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.இந்த நிலையில் வேனை நிறுத்துவதில் டிரைவர்கள் ராஜா மற்றும் வசீகரன் ஆகியோரு கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜாவின் நண்பர்கள் ஆனந்த் சிவகுமார் ஆகியோர் நேற்று இரவு வேன் ஸ்டாண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் வசீகரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சமாதியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வசீகரனின் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஆனந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வேன் டிரைவர்கள் விக்னேஷ், காளிதாஸ் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரிடம் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனக்கூறினர்.
இதனைத்தொடர்ந்து 4 பெண்கள், 2 ஆண்களை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு வேன் புறப்பட்டது. ராமச்சந்திரனே வேனை ஓட்டிச் சென்றார்.
ராமநாதபுரம் நதிப்பாலம் அருகே வேன் சென்றபோது 6 பேர் வந்தனர். அவர்கள் திடீரென வேனை நோக்கி கற்களை வீசினர்.
இதில் வேனின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் வேனை உடனே நிறுத்தினார். வேனில் இருந்தவர்களும் பயத்தில் அலறினர்.
வேன் நின்றதும் 6 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் டிரைவர் ராமச்சந்திரனை தாக்கினர். அவரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியதில், குமராண்டி வலசையைச் சேர்ந்த கண்ணன் (எ) கருப்பட்டி, கவியரசன், உடைச்சியார் வலசை மோடி என்ற முகேஷ் பாண்டி, ஏந்தலைச் சேர்ந்த அகிலன் என்ற தர்மா (20) சாத்தான்குளம் அருண் பிரசாத் (22), கோபிநாத் (20) ஆகியோர் தான் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டனர் என தெரியவந்தது.
அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் அகிலன் என்ற தர்மா, அருண்பிரசாத், கோபிநாத் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நதிப்பாலம் பகுதியில் இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் அந்தப்பகுதி வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.
குடிபோதையில் வரும் வழிப்பறி திருடர்கள், தாக்குதலில் பலரும் காயமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையை தவிர்க்க அந்தப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வழிப்பறி திருடர்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி மாமரத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதே மில்லில் அய்யலூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பவர் வேன் டிரைவராக உள்ளார்.
வேனில் தொழிலாளர்களை அழைத்து வரும் போது அந்த பெண்ணுக்கு கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று வேலைக்கு வந்த பெண்ணை கார்த்திக் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெண்ணின் தாய் பெருமாயி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மைனர் பெண் என்பதால் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் கார்த்திக்கை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி அருகே உள்ள சவுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கடல் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது வேனில் பாளை அருகே உள்ள குமந்தானூரை சேர்ந்த 17 வயது இளம்பெண். அந்த நிறுவனத்துக்கு தினசரி வேலைக்கு சென்று வந்தார். அப்போது கருப்பசாமிக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
அப்போது கருப்பசாமி எப்படியும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணை கற்பழித்தார். தற்போது கருப்பசாமி அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பேசுவதை நிறுத்தி விட்டாராம்.
இதனால் அந்த இளம்பெண் பாளை தாலுகா மகளிர் போலீசில் புகார் செய்தார். பெண் போலீசார் விசாரணை நடத்தி கருப்பசாமி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் முகமது நசீர் (வயது 26). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியில் ஜெயகாந்தன் என்பவரும் வேன் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஜெயகாந்தனுக்கு வந்த ஒரு சவாரியை முகமதுநசீர் குறைந்த கட்டணத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முகமதுநசீர் திரும்பி வந்ததும், ஜெயகாந்தன் மற்றும் 15 பேர் கும்பல் முகமதுநசீரை தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மெடிக்கலுக்குள் முகமதுநசீர் சென்றுள்ளார். அங்கும் சென்று அவரை தாக்கியதுடன், மெடிக்கலில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுப்பட்ட கமாலுதீன், மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஜெயகாந்தன், அம்பிகாபதி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.