உடுமலையில் வேன் டிரைவர் தற்கொலை

காளிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். காளிமுத்து சீலிங்பேனில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்.இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காளிமுத்து( வயது 32)தனியார் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. காளிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காளிமுத்து சீலிங்பேனில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காளிமுத்துவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து காளிமுத்து தந்தை சுப்பிரமணியம் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் காளிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com