என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பி.என்.ரோட்டில் வேன் நிறுத்துவதில் டிரைவர்களுக்குள் மோதல் -  2 பேருக்கு சரமாரியாக வெட்டு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் பி.என்.ரோட்டில் வேன் நிறுத்துவதில் டிரைவர்களுக்குள் மோதல் - 2 பேருக்கு சரமாரியாக வெட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என் ரோடு சாந்தி தியேட்டர் அருகில் வேன் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான வேனை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.இந்த நிலையில் வேனை நிறுத்துவதில் டிரைவர்கள் ராஜா மற்றும் வசீகரன் ஆகியோரு கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜாவின் நண்பர்கள் ஆனந்த் சிவகுமார் ஆகியோர் நேற்று இரவு வேன் ஸ்டாண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் வசீகரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சமாதியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வசீகரனின் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஆனந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வேன் டிரைவர்கள் விக்னேஷ், காளிதாஸ் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×