search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup 2018"

    ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. ஹாங் காங் அணி தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முக்கிய தொடருக்கு வந்தது. மற்ற ஐந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

    ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.



    2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.



    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
    முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு --- ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் #AsiaCup2018 #INDvAFG
    ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    அஹ்மதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

    ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.



    தொடர்ந்து விளையாடிய ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.



    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஷேசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். #AsiaCup2018 #INDvAFG
    ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.



    அஹமதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

    ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.
    இந்திய ஒருநாள் அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை டோனி படைத்துள்ளார். #AsiaCup2018 #MSDhoni #Dhonicaptain
    ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    கேப்டன் மற்றும் துணைக் கேப்டனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் எம்எஸ் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். டோனி ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்கும் 200-வது போட்டி இதுவாகும். இதன்மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    டோனி கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பணியாற்றினார். அதன்பின் தற்போது 696 நாட்கள் கழித்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

    எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வலைப் பயிற்சியைப் பார்த்து அசந்து விட்டேன் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் பிரிவிலும், சூப்பர் 4 சுற்றிலும் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எந்த அளவிலும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘டெத்’ ஓவரில் அசத்தினார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் ஐசிசி அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து சிலிர்த்து போய்விட்டார். பும்ராவின் பந்து வீச்சு வீடியோவை காண்பித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன் என்றார்.



    இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பயிற்சியின் போது நாங்கள் 20 நிமிடம் அமர்ந்து, பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்தோம். யார்க்கர், யார்க்கர் என அடுத்தடுத்து யார்க்கராக வீசி அசத்தினார். அவரது பந்து வீச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அதை எங்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.

    நாங்கள் பும்ராவின் பந்து வீச்சை வீடியோவை காண்பித்து, ‘டெத்’ ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்களது வீரர்களுக்கு கற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

    நாளை நடைபெறும் வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், வெள்ளிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார். #AsiaCup2018 #Dhoni
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.
    ரோகித் சர்மாவின் கேப்டன் திறமையை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மனதார வாழ்த்தியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். இவரது தலைமையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.



    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.

    அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
    ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvAFG
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

    ‘லீக்’ ஆட்டங்களில் ஹாங்காங்கை 26 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்திம் வென்றது. இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தது.

    இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியாவின் அதிரடி நீடிக்கும்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் தவான் 327 ரன்னும், கேப்டன் ரோகித்சர்மா 269 ரன்னும், அம்பதி ராயுடு 116 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா (7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் (தலா 5 விக்கெட்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.


    தவான், டோனி அல்லது தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சித்தார்த் கவூல், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    ஆப்கானிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டங்களில் இலங்கை, வங்காளதேசத்தை வீழ்த்தியது. ஆனால் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசத்திடம் தோற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. #AsiaCup2018 #INDvAFG
    ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார். #AsiaCup2018 #RohitSharma #IndiavsPakistan
    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர்-4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி அசத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக் 78 ரன்னும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக அடித்து ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதற வைத்ததுடன், அணியை வெற்றிப் பாதையில் அருமையாக அழைத்து சென்றனர். 15-வது சதம் அடித்த ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சோயிப் மாலிக் பந்து வீச்சில் ஹசன் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 33.3 ஓவர்களில் 210 ரன்னாக இருந்தது.



    அடுத்து அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. 19-வது சதம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 111 ரன்னும், அம்பத்தி ராயுடு 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி ‘சூப்பர்-4’ சுற்றில் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை சாய்த்து இருந்தது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்த பாகிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இந்திய அணி ஒரு ஆட்டம் மீதம் இருக்கையிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை பதம் பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘நமது அணியின் ஒட்டுமொத்த பவுலர்களும் தங்கள் இலக்கை எட்ட தீவிரம் காட்டினார்கள். சவாலான இந்த சூழலில் பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை அதிகம் ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரிய விஷயமாகும். இதனால் வெற்றி எளிதில் நமது வசமானது. ஷிகர் தவான் அணியில் தனது பங்கை உணர்ந்து விளையாடக்கூடியவர். நான் அவரிடம் அதிகம் பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இங்குள்ள சூழலில் சிக்சர் அடிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக கடினமாக பயிற்சி எடுத்தேன். எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அதிரடி ஷாட்களை ஆடினேன். ஏனெனில் பாகிஸ்தான் அணி வலுவான பந்து வீச்சை கொண்டதாகும். அவர்களுக்கு நாம் நெருக்கடி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் முன்பு போல் நமக்கு தொல்லை கொடுத்து விடுவார்கள். முதல் 10 ஓவர்களுக்குள் விக்கெட்டை இழக்காமல் விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘ரோகித் சர்மா உள்பட சிலரின் கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதன் பலனை போட்டி முடிவில் அனுபவித்தோம். அத்துடன் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். கேட்ச்களை நாங்கள் தவறவிடாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு மாதிரி அமைந்து இருக்கலாம். மாலையில் இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தால் வெற்றி இலக்கை சேசிங் செய்வது எதிரணிக்கு கடினமானதாக இருந்து இருக்கும். தொடக்கத்தில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் சரிவில் இருந்து மீண்டு வர முடியாமல் போய்விட்டது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆட்டம் அருமையாக இருந்தது. எங்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஆட்ட திறன் உயர்வானது. நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் எங்கள் ஆட்ட திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும். அதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். #AsiaCup2018 #RohitSharma #IndiavsPakistan

    பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் டிஆர்எஸ் முறையை துல்லியமாக கணிக்கும் டோனியின் அறிவாற்றலை டுவிட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். #Dhoni #DRS
    கிரிக்கெட் போட்டியில் மைதான நடுவர்கள் அவுட் கொடுப்பதில் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஒரு வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது நடுவரின் தவறான முடிவால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகி விடும். இதனால் நடுவர் தீர்பை எதிர்த்து அப்பீல் செய்யும் நோக்கி நடுவர் முடிவை எதிர்த்து முறையிடும் டிஆர்எஸ் (Decision Review System).

    நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதித்து பேட்ஸ்மேன் அல்லது பீல்டிங் அணி கேப்டன் ரிவியூ கேட்கலாம். பந்து வீச்சு அணி ரிவியூ ஆப்சன் கேட்கும்போது, பந்து வீச்சாளரும், விக்கெட் கீப்பரும்தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுக்குத்தான் பந்து லைனில் பிட்ச் ஆனதா? பந்து பேட்டில் பட்டதா? ஸ்டம்பை தாக்குமா? ஸ்டம்பிற்கு மேல் செல்லுமா? என்பதை இவர்கள்தான் சரியாக கணிக்க வேண்டும்.

    இதில் இந்திய அணி விக்கெட் கீப்பர் டோனி வல்லவர். இவர் ரிவியூ ஆப்சனை கேட்க சொன்னால், கட்டாயம் அது அவுட்டாகத்தான் இருக்கும். ஒருமுறை ஜடேஜா டோனி பேச்சை கேட்காமல் ரிவியூ கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், டிஆர்எஸ் வெற்றி பெறவில்லை. இதனால் டோனி ஜடேஜா மீது கடும் கோபம் கொண்டார்.

    பெரும்பாலும் டிஆர்எஸ் என்பது டோனி ரிவியூ சிஸ்டம் என்று அவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு. நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் 7 ஓவரில் பாகிஸ்தான் விக்கெட்டை இழக்கவில்லை.

    8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆட முயன்றார். அப்போது பந்து பேடை தாக்கியது. மிக அதிக தூரம் முன்னாள் வந்து ஆடியதால் பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்று விடுமோ? என்ற சந்தேகம் சாஹலுக்கும் ரோகித் சர்மாவிற்கும் இருந்தது.

    ஆனால் டோனி எதையும் பற்றி யோசிக்காமல் டிஆர்எஸ் கேட்க ரோகித் சர்மாவிற்கு சிக்னல் கொடுத்தார். முக்கியமான நபரிடம் இருந்து சிக்னல் வந்ததும் யோசிக்காமல் ரோகித் சர்மா ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லாம் இமாம் உல் ஹக் அவுட் என்பது தெரியவந்தது.

    இதனால் டிஆர்எஸ் முறையில் டோனியின் அறிவாற்றல் குறித்து டுவிட்டர்வாசிகள் புகழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலானோர் டிஆர்எஸ் என்றாலே டோனி ரிவியூ சி்ஸ்டம்தான் என்று பாராட்டியுள்ளனர்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 237 ரன்கள் சேர்த்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அதேபோல் சதம் அடித்த ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு சச்சின் தெண்டுல்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    ×