search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appreciation"

    • ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர்.
    • கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கணபதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 150 பவுன் தங்க நகை ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி கொள்ளை போனது. சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொ ள்ளையனை தேடி வந்தனர்.

    இதில் 2 ஆயிரம் சி.சி.டி.வி கேமிரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த 1-ந் தேதி ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான கொள்ளையன் ஆனந்தகுமார் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள லும் சேர்த்து 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் குழுவில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோம சுந்தரம், சண்முகம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட க்ரைம் டீம் போலீ சார் இருந்தனர்.

    இவர்களுக்கு ஏற்கனவே ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி உள்ளிட்ட 14 பேரையும் கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    • வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது,
    • வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு கொடுமுடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது, இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் தற்போது குடிநீர் குழாய் இணைப்பை சாலையோரத்தில் மாற்றி அைமக்கப்பட்டது. பின்னர் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பணி மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டதால், நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதற்காக வெள்ளகோவில் நகராட்சியின் தலைவர் மு.கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோர் திருப்பூர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ரஷ்யா பயணம் குறித்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே பெரியக்கோட்டையை சேர்ந்தவர் வீரையன்.

    இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17).

    இவர் மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த நிலையில், பிரம்மோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான சிவதானுப்பிள்ளை, அரசு பள்ளி மாணவர்கள் ராக்கெட் அறிவியில் தொழில்நுட்பத்தை இணைய வழி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இணைய வழி தேர்வு செய்யப்பட்டது.

    அதில் மதுக்கூர் அரசு பள்ளி மாணவன் சந்தோஷ் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் தேர்ந்தெ டுக்கப்பட்ட 40 பேரில் சந்தோஷ் ஒருவர் ஆவார்.

    இந்நிலையில் ரஷ்யாவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய மாணவர் சந்தோஷ்க்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், ராக்கெட் சயின்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஒவியரசன், உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், பாலகுமார், ஆசிரியைகள் மதுக்கூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாலை அணிவித்து வெடி வெடித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மேலும் அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    பள்ளி உதவித்தலைமை யாசிரியர்கள் பாலகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவருக்குப் பயிற்சியும் ஊக்கம் அளித்த ஒருங்கிணைப்பாளர்.

    ஓவியரசன் தலைமை ஆசிரியரால் கௌர விக்கப்பட்டார்.

    மேலும் மாணவர் சந்தோஷ் தனது ரஷ்யா பயணம் பற்றிய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து நீங்களும் என்னைப்போல் பயணம் மேற்கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

    • குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.
    • உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கடற்கரை கையுந்துபந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர். இறகு பந்து மூத்தோர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை பெற்றனர். சதுரங்கப்போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக இளையோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டு போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து 9 வருடங்களாக ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் குறுமைய அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
    • மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபுவனேஸ்வரி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முல்லையூர், தங்கையன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையார், பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியத்திருக்கோணம், குணசேகரன், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தா.பழூர், அமலோற்பவம், தலைமையாசிரியர், பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம், சுகுணா, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சோழன்குடிகாடு, செ.இராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியர் மாண்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற மேற்கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அரியலூர் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர்கள் தொடர்ந்து இதே போன்று மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணியினை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்சாமி முத்தழகு, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்திராயன்-3 நிலாவில் சாதனை தேச ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
    • மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியா அனுப்பிய சந்திராயன்-3, நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இதுவரை நிலவின் தென்பகுதியில் யாரும் ஆய்வு செய்யாத நிலையில் நமது சந்திராயன் முதன் முறையாக அங்கு கால்தடம் பதித்து இருப்பது உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளன.

    நமது நாடு பல மொழி, பல இனம், பல மதம் என இருந்தாலும் தேசம் என்று வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். அதற்கு எடுத்து காட்டாக, சந்திராயன் நிலவில் தரையிறங்கும் காட்சியை கோடான கோடி மக்கள் நேற்று நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். சந்திராயன் வெற்றியை அனைவரும் கொண்டாடினர். இந்த வெற்றி, நமது தேசத்தின் ஒற்றுமையை உலக்கு பிரதிபலித்து இருக்கிறது. இந்த ஒற்றுமை நமக்கு மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி சந்திராயன் வெற்றிக்கு பாடுப்பட்டவர்களை வாழ்த்தி இருக்கிறார். அவரது வழியில் மதுரை மக்கள் சார்பாக நானும் சந்திராயன் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி களை மனதார பாரட்டு கிறேன்.

    இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு தமிழரான திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் இருப்பது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமையான விஷயம். எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்த தருணத்தில் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த திட்டத்திற்கு ஊக்கம் தந்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கு எனது நன்றியை தேரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் கண்டறியப்பட்ட தோடு, அவர்கள் திருடி வைத்திருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறி வதற்கும் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு பெற்று தருவதற்கும், உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கவுரவிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முடிவு செய்தார். அதன்படி பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அக்கறையுடன் செயல்பட்ட 50 பேரை நேரில் வரவழைத்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தாமாக முன்வந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூகநோக்கில் சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    • மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான தற்காப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    தாளாளர் தி வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். ஊக்க பேச்சாளர் வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி யில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி காமினி, மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ஸ்ரீ, மாநில அளவிலான சுருள்வாள் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவன் கவிபாலராஜன் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    துணை நிர்வாக முதல்வர் பானுப்பிரியா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா நன்றி கூறினார்.

    • புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.
    • அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. 9 நாடுகளை சோ்ந்த 11 மொழிகளில் 30 திரைப்படங்கள் திரையிட்டதில், தமுஎகச., திரைப்பள்ளியில் பயிற்சி பெற்ற அவிநாசி கிளை இளைஞா்கள் பகத்சிங், ரமேஷ்கவின் ஆகிய இருவா் பங்கேற்று, 'ஜன்னல்' என்ற குறும்படமும், 'லவ்வீஸ் லவ்' ஆகிய குறும்படமும் இயக்கி வெளியிட்டனா்.

    இவா்களுக்கு தமுஎகச., மாநில பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா, மாநிலக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், திரைப்பள்ளி நிா்வாகிகள் அருள்மணி, சிவக்குமாா், களபிரன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கினா். அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

    • குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற கரூர் மாவட்டததை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • மாவட்ட நூலகத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் விழா நடைபெற்றது

    கரூர், 

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. இப்பயிற்சிவகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகும் அருண் குமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வரித்தண்ட லராகும் லாவண்யா, வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளர்களாகும் வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், போக்குவரத்து துறையில் இள நிலை உதவியாளராகும் தீபன், கைத்தறி துறையில் இளநிலை உதவியாளரா கும் இளவரசன், வருவாய்த்துறையில் விஏஒவாகும் விக்னேஷ், ஆகியோர் பணி ஏற்க உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தினார்.மாவட்ட திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

    • பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.
    • தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கைக்குன்று குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும், குடிநீரில் பாசிகள் கலந்து வருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உடனடியாக பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.

    பின்னர் அங்கு படிந்திருந்த சுவர் பாசிகளை அகற்றி, பிளிச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்யும் தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இதை பார்த்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள், தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    ×