search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water pipe repair"

    • வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது,
    • வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு கொடுமுடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் அருகே திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது, இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் தற்போது குடிநீர் குழாய் இணைப்பை சாலையோரத்தில் மாற்றி அைமக்கப்பட்டது. பின்னர் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பணி மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டதால், நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதற்காக வெள்ளகோவில் நகராட்சியின் தலைவர் மு.கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோர் திருப்பூர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • தண்ணீர் வீணாக பாலாற்றில் கலந்தது தடுக்கப்பட்டது
    • சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது

    ஆம்பூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பாலாற்றில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக் குப்பம் பாலாற்றில் அமைக்கப் பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் ராட்சதக் குழாய் கடந்த சில நாட் களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால், தண்ணீர் வீணாக பாலாற்றில் கலந்து ஓடியது.

    இதன் காரணமாக வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் ராணிப்பேட்டை மாவட்ட நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொது மக்களின் குடிநீர் சேவையை கருத்தில் கொண்டு அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களைக் கொண்டு தற்காலிகமாக குடிநீர் விநியோகம் செய்து வந்தது.

    இந்நிலையில், பச்சக்குப்பம் ஆம்பூர் பாலாற்றில் சேதமடைந்த குடிநீர் குழாய் சரி செய்யும் பணிகள் தொடங்கின.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குடிநீர் குழாய் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய ஈடுபட்டு விரிசலை சரி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு சரி பார்ப்புப்பணிகள் நடைபெற்றன.

    ×