search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore DIG for"

    • ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர்.
    • கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கணபதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 150 பவுன் தங்க நகை ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி கொள்ளை போனது. சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொ ள்ளையனை தேடி வந்தனர்.

    இதில் 2 ஆயிரம் சி.சி.டி.வி கேமிரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த 1-ந் தேதி ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான கொள்ளையன் ஆனந்தகுமார் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள லும் சேர்த்து 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் குழுவில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோம சுந்தரம், சண்முகம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட க்ரைம் டீம் போலீ சார் இருந்தனர்.

    இவர்களுக்கு ஏற்கனவே ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி உள்ளிட்ட 14 பேரையும் கோவைக்கு நேரில் வரவழைத்து டி.ஐ.ஜி சரவண சுந்தர் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

    ×