search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advice"

    • ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

    முகாமை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோ சனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

    முகாமில் பொதும ருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு மருத்துவத்திற்கு ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, கழக நிர்வாகி அறிவழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி , வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    • இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

    மெலட்டூர்:

    தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தஞ்சை அவர் லேடி ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

    முகாமில் புனித சந்தன மாதா ஆலய பங்குதந்தை விக்டர்தாஸ் முன்னிலை வகித்தார்.

    இதில் ராராமுத்திர கோட்டை ஊராட்சி தலைவர் சோழன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய மாதா ஆஸ்பத்திரி ஷோபா, வின்மலர் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

    • பயணம் மேற்கொள்வது மேலும் சிரமத்தை உண்டாக்கும்.
    • எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதன் மூலம் உதிரப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவிப்பார்கள். இந்த நேரத்தில் சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் பயணம் மேற்கொள்வது மேலும் சிரமத்தை உண்டாக்கும். அவற்றை தவிர்ப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்வோம். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு. உங்களது மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதற்கு ஏற்றதுபோல பயணத்தை திட்டமிட வேண்டும்.

    * மாதவிடாய் காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சானிட்டரி நாப்கின்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகளை கூடுதல் எண்ணிக்கையில் உடன் கொண்டு செல்ல வேண்டும்.

    * கூடுதலாக உள்ளாடைகள் மற்றும் வெட் டிஷ்யூ எனப்படும் ஈரப்பதமுள்ள துணிகளை உடன் வைத்திருப்பது நல்லது. அதிக உதிரப்போக்கு ஏற்படக்கூடிய சமயங்களில் இது உங்களுக்கு உதவும்.

    * எப்போதும் ஒரு பாலிதீன் பையை உடன் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கறை படிந்த உடைகளை அதில் போட்டு பாதுகாப்பாக வைக்க முடியும்.

    • மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலிகளை பயணத்தின்போது சமாளிப்பது சற்றே சிரமமானது. எனவே ஹீட்டிங் பேடு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

    * பயணத்தின்போது இறுக்கமான ஆடைகளை அணியாமல், அடர் நிறத்தில் இருக்கும் மெல்லிய பருத்தி உடைகளை அணியலாம். இதன் மூலம் அந்தரங்க பகுதிகளில் வியர்வை படிவதன் காரணமாக அரிப்பு ஏற்படு வதை தடுக்கலாம்.

    * அதிக அளவு உத்திரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    * பயணத்தின்போது எலுமிச்சம் பழச்சாறு அதிகமாக குடிப்பதன் மூலம் உதிரப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.

    * பயணத்தின்போது சுத்தமான கழிப்பறைகள் எங்கு இருக்கின்றன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    மாதவிடாய் நாட்களில் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்:

    * ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்கும் மற்றும் முடிவடையும் நாட்களை தவறாமல் குறித்து வையுங்கள்.

    * மாதவிடாய் நாட்கள் நெருங்கும் சமயத்தில், உடல் மற்றும் மன ரீதியாக அதற்கு தயாராகுங்கள்.

    * மாதவிடாய் நாட்களில் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். மிதமான சூடுள்ள தண்ணீர் குடிப்பது நல்லது.

    * தினமும் இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குங்கள். இதன்மூலம் ஹார்மோன்கள் சமநிலைப்படும்.

    * மாதவிடாய் நாட்களில் இனிப்புகள், நொறுக்குத் தீனிகள் மீது அதிக ஈர்ப்பு ஏற்படும்.

    * சர்க்கரை சேர்த்த பொருட்களை அதிகமாக சாப்பிடும்போது மன அழுத்தம் அதிகரிக்கும். அதிகப்படியான உப்பு கலந்த உணவுகள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும்.

    * மிதமான நடைப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

    • சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோரி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கொண்டாவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே அமைக்கப்படும் விநாயகர் சிலை தொடர்பாக விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பாபநாசம் துர்கா மஹாலில் சிறப்பு கூட்டம் பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் போது விநாயகர் சிலை நிறுவுதல், ஊர்வலமாக கொண்டு செல்லுதல், பின்னர் நீர் நிலைகளில் கரைத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் விழாக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வேதாரண்யம் கடலோர காவல் குழுமஇன்ஸ்பெக்டர், ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை வகித்தார்கோடியக்கரை.

    மீனவகிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மீனவர்களிடம் பேசியதாவது

    கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணைபோகாமல் குற்றங்கள் மற்றும் கடத்தல், அந்நியர்கள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு உடைகள், கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தெஎழிலாளர்களை அழைத்து செல்லக்கூடாது எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாதுஎன்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினர்.

    • கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருகிறது.
    • 13 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதா?

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் 5.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோடை காலம் போல கொளுத்திய வெயிலால் குறுவை பயிர்செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டது.

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6 நாட்களுக்கு ஒரு முறை மாறி மாறி தண்ணீர் விடப்பட்டது. அவ்வாறு 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்பட்ட போதும் முழு அளவில் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனால் குறுவை நடவு செய்த வயல்கள் டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் காய்ந்து வெடிப்பு நிலை காணப்பட்டது.

    இது போன்ற ஒரு சூழ்நிலையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய வேளாண் துறை நீர் பற்றாக்குறை காலங்களில் எந்த விதமான யுக்தியை மேற்கொண்டால் நல்ல முறையில் விளைச்சல் எடுக்கலாம் என்ற எந்த ஆலோசனையையும் வழங்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் முன்சம்பா மற்றும் இயல்பான சம்பா சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களில் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளை தொடங்காத சூழ்நிலையும் தற்போது நிலவுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ,நீர் இருப்பு மிகவும் குறைவான நிலையில் உள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிட்டு , உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. இதிலும் கூட கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருகிறது.

    இதனால் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள 5.75 லட்சம் ஏக்கர் குறுவை பயிர் விளைந்து அறுவடை செய்யமுடியுமா?என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் 13 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை துவக்குவதா? தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா?என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டாலும் ,வெயில் காரணமாகநிலத்தடி நீர் குறைந்து பயிர் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர்.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில். இன்னும் எத்தனை நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது புரியாத நிலையில் விவசாயிகள் தவித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை வேளாண் துறை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    குறைந்த நீரைக் கொண்டு குறுவை சாகுபடி நிறைவு செய்வது எப்படி? சம்பா சாகுபடி பணிகளில் எந்தவிதமான முறைகளை கையாண்டால் குறைந்த நீர் திட்டமிடலில் அதிக மகசூல் அல்லது விவசாயிகளை நஷ்டப்படுத்தாத மகசூல் பெறலாம் என்பது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    • வருகிற 26-ந் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் கூட்டம் நடந்தது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன் (பொது), வேல்முருகன் (தொழில்நெறி வழிகாட்டல்), வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
    • 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மக்கள் நலக்கழகம் செயலாளர் பக்கிரி சாமி, இது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்க னுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஸ்வதேஷ் தர்ஷன்' ஆலோசனை க்கூட்டத்தில், காரைக்கால் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.

    குறிப்பாக இத்திட்ட த்தில் காரைக்கால் வணிகம் பெருகுவதற்கும், காரைக்கால் நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, காரைக்கால் நகர் பகுதிக்கு வரும் பலர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர், மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்கு வரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க, காரைக்கால் பழைய பஸ் நிலையம் பகுதி, கடந்த பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருப்பதால், அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் இத்திட்டத்தின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    திருப்பூர்,ஆக.13-

    திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியங்கள், சாமளாபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக சாமளாபுரம் பேரூராட்சி, பல்லடம் மற்றும் பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், குடிநீா் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும்.
    • யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    இந்திர தனுஷ் திட்டம் விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1342 குழந்தைகள் மற்றும் 132 கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்று எதிர்வரும் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் இந்த விவரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய மருத்துவ துறையினருக்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

    High Risk எனப்படும் அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் புலம் ெபயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜெகதீஸ்குமார், உலக சுகாதார அமைப்பை சார்ந்த ஆஷா மற்றும் வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது

    அரும்பாவூர்,

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு டத்தோபிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ளது போல் பூலாம்பாடியில் பெரிய அளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் டத்தோ பிரகதீஸ்குமார் அவரது சொந்த செலவில் செய்து தர தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.பூலாம்பாடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை கோயம்பேட்டிற்கு அனுப்புவதற்கும் திட்டம் இருப்பதாககூறியிருந்தார்.இந்த நிலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் முன்பு டத்தோ பிரகதீஸ்கு மார்தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்தும் காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.அதைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமார் பேசும் போது , காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் ஆகியவற்றை பெற்று தர தனது கம்பெனி செலவிலேயே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உங்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவர். ஒரு விவசாயி ஒரே காய்கறிகளை பயிரிடாமல் வெவ்வேறு காய்கறிகளை பயிரிட்டால் லாபம் கிடைக்கும்.அக்டோபர் 25 ல் பூலாம்பாடியில் தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு, கோயம்பேடு மார்க்கெட் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் என் சொந்த செலவில் அனுப்பப்படும் என அவர் என தெரிவித்து அதற்கு விவசாயிகள் இப்பொழுதே தயாராகும்படி கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் பூலாம்பாடி கடம்பூர் உடும்பியம் பெரியம்மாபாளையம் அரும்பாவூர் மலையாள பட்டி தழுதாழை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக தமிழகத்தில் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 20-ந் தேதி 850 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தஞ்சை மாவட்டத்தில் இன்று 880 மையங்களில் தொடங்கியது.

    இந்த நிலையில் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை தாலுகாவில் முகாம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தாசில்தார் சக்திவேலுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து முகாம் நடைபெறும் இடத்தில் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அலுவலர்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே திடீரென போன் செய்தார். முகாமுக்கு சென்று விட்டீர்களா ? நீங்கள் பணிபுரியும் முகாமில் எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று விண்ணப்பம் பதிவு செய்யப்படும்? குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை மேலே வீதியில் விண்ணப்பம் பதிவு முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார். முகாமில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    மாவட்டம் முழுவதும் இன்று தொடங்கியுள்ள முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமில்

    குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது ,வங்கி பாஸ் புத்தகம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முகாம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக 333 ரேஷன் கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதா ரர்களிடமும் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை விண்ணப்பம் , டோக்கன் வினியோகம் செய்யப்படும். தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும்.

    ×