search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மகளிர் உரிமை திட்ட கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து அலுவலர்களிடம் தொலைபேசியில் விவரங்களை கேட்டறிந்த கலெக்டர் தீபக் ஜேக்கப்.

    தஞ்சையில், மகளிர் உரிமை திட்ட கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக தமிழகத்தில் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 20-ந் தேதி 850 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தஞ்சை மாவட்டத்தில் இன்று 880 மையங்களில் தொடங்கியது.

    இந்த நிலையில் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை தாலுகாவில் முகாம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தாசில்தார் சக்திவேலுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து முகாம் நடைபெறும் இடத்தில் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அலுவலர்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே திடீரென போன் செய்தார். முகாமுக்கு சென்று விட்டீர்களா ? நீங்கள் பணிபுரியும் முகாமில் எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று விண்ணப்பம் பதிவு செய்யப்படும்? குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை மேலே வீதியில் விண்ணப்பம் பதிவு முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார். முகாமில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    மாவட்டம் முழுவதும் இன்று தொடங்கியுள்ள முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமில்

    குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது ,வங்கி பாஸ் புத்தகம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முகாம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக 333 ரேஷன் கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதா ரர்களிடமும் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை விண்ணப்பம் , டோக்கன் வினியோகம் செய்யப்படும். தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும்.

    Next Story
    ×