search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

    • பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    திருப்பூர்,ஆக.13-

    திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியங்கள், சாமளாபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக சாமளாபுரம் பேரூராட்சி, பல்லடம் மற்றும் பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், குடிநீா் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×