search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porur"

    • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
    • வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    போரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாபுசங்கர். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஓட்டு போடுவதற்காக குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றார்.

    நேற்று அதிகாலை திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, போரூர் அருகே அமைந்துள்ள தனியார் கார் பார்க்கிங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. #PorurCallTaxiFire
    சென்னை:

    சென்னை, போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மளமளவென தீ பிடித்தது. 

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். 



    கார்களில் பிடித்த தீ காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட புகையால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த தீவிபத்தில் சுமார் 214 கார்கள் எரிந்து நாசமாகின.

    ஏற்கனவே, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. #PorurCallTaxiFire
    போரூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர் நகர் கங்கை கொண்ட சோழன் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன் குடிப்பதற்காக வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

    போரூர் அருகே கார் மோதி வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (50). தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    சக்கரபாணி மினி வேன் மூலம் மாங்காட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் பொருட்களை இறக்கி விட்டு திரும்பும் வழியில் அதிகாலை 1.30 மணி அளவில் போரூர் தனியார் மருத்துவமனை அருகில் வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வேனை நோக்கி வந்தார்.

    அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சக்கரபாணி மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் அசோக் நகரைச் சேர்ந்த விஜயன் (37 என்பவரை கைது செய்தனர்.

    போரூர் போலீஸ் நிலையம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியரை கத்தியால் வெட்டி, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். #ATM #MoneyRobbery
    பூந்தமல்லி:

    சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி(30) ஆகியோர் இந்த ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப காரில் வந்தனர்.

    மொத்தம் ரூ.14 லட்சம் வைத்து இருந்தனர். அதில் ரூ.4 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைக்காமல், திறந்து இருந்த நிலையிலேயே வைத்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் மீதம் ரூ.10 லட்சம் இருந்தது.

    அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். இருவரும் தலையில் ஹெல்மெட்டும், கை உறையும் அணிந்து இருந்தனர். ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருக்க, மற்றொருவர் மட்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, தேவராஜ் கையில் ரூ.10 லட்சம் இருந்த பெட்டியை தரும்படி கேட்டார்.

    காயம் அடைந்த தேவராஜ்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், முரளி இருவரும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தேவராஜூக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அதில், தேவராஜ், முரளி இருவரும் நேற்று மதியம் முதல் ரூ.35 லட்சம் பணத்துடன் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பினர். பின்னர் கடைசியாக ரூ.14 லட்சம் பணத்துடன் இரவு 8.30 மணியளவில்தான் நூம்பல் பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை நிரப்பினர்.

    கொள்ளையர்கள் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்து, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் தேவராஜ், முரளி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகிலேயே போரூர் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #ATM #MoneyRobbery
     
    போரூர் அருகே வீட்டில் புதிதாக பொருத்திய இரும்புகேட் சரிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர், கணேஷ் அவின்யூ 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் விஷால் (வயது6). அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஆசிரியர்கள் போராட்டத்தால் இன்று காலை அவன் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகில் புதிதாக கட்டிய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கேட் மீது ஏறி அவன் விளையாடினான்.

    அப்போது திடீரென இரும்பு கேட் சரிந்து சிறுவன் விஷால் மீது விழுந்தது. இதில் விஷால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விஷாலின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். சக்கரத்துடன் உள்ள இரும்பு கேட் சரியாக பொருத்தப்படாததால் அது சரிந்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர் அருகே ஆட்டோவில் போதை பாக்கு- புகையிலை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூரை அடுத்த அய்யப் பந்தாங்கல் பஸ் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் மூன்று மூட்டைகளில் மாவா தயாரிக்கும் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் வியாசர்பாடியைச் சேர்ந்த விஜய்யை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ மற்றும் 200 கிலோ மாவா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விஜய் அளித்த தகவலின் படி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிவேஷ்குமார், ராஜேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் பாரிமுனை பகுதியில் இருந்து மாவா பொருட்கள் வாங்கி வந்து அய்யப்பந்தாங்கல் பகுதியில் வீட்டில் வைத்து அறைத்து தயார் செய்து பொட்டலங்களாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குமரேசன் அளித்த தகவலின்படி, போரூர் பைபாஸ் சாலை அருகே நேற்று இரவு நைஜீரியாவைச் சேர்ந்த சிகு சைமன் ஒபானா (30) என்பவரை போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அவனிடமிருந்து 450 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவன் நெதர்லாந்து நாட்டில் இருந்து போதை மாத்திரைகளை வரவழைத்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி அதை சென்னை, கோவா, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டாளிகள் மூலம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

    சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு இருக்கிறது. கைதான சிகு சைமனுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூரில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    அரும்பாக்கம் ஜெய்நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பார்த்த சாரதி (வயது 55) செக்யூரிட்டி கிரைம் பிரிவு சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று போரூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் இரவு 8மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக போரூர் மார்க்கெட்டிற்கு சென்றபோது பார்த்தசாரதி தீடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் பார்த்த சாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #WomanSuicide
    போரூர்:

    மதுரவாயல் ராஜீவ் காந்தி நகர் 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற ஞான பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயர்.

    இவரது மனைவி காயத்ரி (25) ஒரகடத்தில் என்பீல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞானபிரகாஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வீட்டிலும் சேர்க்கவில்லை. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனால் காயத்ரி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கணவர் ஞான பிரகாஷ் அலுவலக வேலை காரணமாக புனே சென்று இருந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. திருமணம் நடந்து ஒரு வருடமே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார். #WomanSuicide

    போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் குழந்தையை முட்புதரில் வீசிய தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    போரூர்:

    போரூரை அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மின்சார சுடுகாடு அருகே உள்ள முள்புதரில் கடந்த 11-ந் தேதி பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்தது.

    வளசரவாக்கம் போலீசார் குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆற்காடு சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் கையில் பையுடன் வந்து குழந்தையை புதரில் போட்டு சென்றது தெரியவந்தது.

    இதனை வைத்து விசாரணையை தொடங்கினார். இதில் குழந்தையை வீசி சென்றது காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா (22) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    எனது சொந்த ஊர் திருச்சி. கடந்த ஒரு வருடத்திற்கு முன் தாயுடன் காரம்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினேன்.

    நான் சென்ட்ரல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவருடன் நெருக்கமான தொடர்பு இருந்ததால் திருமணத்துக்கு முன்பே நான் கர்ப்பம் அடைந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது தாய் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென இறந்து விட்டார்.

    இதனால் உறவினர் திருமணம் செய்ய மறுத்து என்னை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டில் உள்ள கழிவறையில் குழந்தையை பெற்றேன் குழந்தையை பராமரிக்க முடியாமல் தவித்தேன்.

    குழந்தை தொடர்ந்து அழுது வந்ததால் வேறு வழி தெரியாமல் 10-ந்தேதி இரவு குழந்தையை லுங்கியால் சுற்றி பையில் வைத்து முள் புதரில் வீசி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றி சென்ற உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×