என் மலர்
செய்திகள்

போரூர் அருகே கார் மோதி வேன் டிரைவர் பலி
போரூர்:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (50). தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
சக்கரபாணி மினி வேன் மூலம் மாங்காட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் பொருட்களை இறக்கி விட்டு திரும்பும் வழியில் அதிகாலை 1.30 மணி அளவில் போரூர் தனியார் மருத்துவமனை அருகில் வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வேனை நோக்கி வந்தார்.
அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சக்கரபாணி மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் அசோக் நகரைச் சேர்ந்த விஜயன் (37 என்பவரை கைது செய்தனர்.






