என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூர் அருகே வீட்டில் புதிதாக பொருத்திய இரும்புகேட் சரிந்து விழுந்து சிறுவன் பலி
    X

    போரூர் அருகே வீட்டில் புதிதாக பொருத்திய இரும்புகேட் சரிந்து விழுந்து சிறுவன் பலி

    போரூர் அருகே வீட்டில் புதிதாக பொருத்திய இரும்புகேட் சரிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர், கணேஷ் அவின்யூ 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் விஷால் (வயது6). அருகில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஆசிரியர்கள் போராட்டத்தால் இன்று காலை அவன் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகில் புதிதாக கட்டிய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கேட் மீது ஏறி அவன் விளையாடினான்.

    அப்போது திடீரென இரும்பு கேட் சரிந்து சிறுவன் விஷால் மீது விழுந்தது. இதில் விஷால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விஷாலின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். சக்கரத்துடன் உள்ள இரும்பு கேட் சரியாக பொருத்தப்படாததால் அது சரிந்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×