search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug tablets"

    • அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகரில் போதை மாத்திரை விற்கப்படுவதாக புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள், 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் அனுப்பானடி தெய்வகன்னி தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சாம் நிகேதன் (வயது 20), அண்ணா நகர் அன்னை தெரு சங்கரநாராயணன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), தென்காசி மாவட்டம் புளியரை நாயுடு தெரு, சுப்புராமன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 23) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குமரேசன் அளித்த தகவலின்படி, போரூர் பைபாஸ் சாலை அருகே நேற்று இரவு நைஜீரியாவைச் சேர்ந்த சிகு சைமன் ஒபானா (30) என்பவரை போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அவனிடமிருந்து 450 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவன் நெதர்லாந்து நாட்டில் இருந்து போதை மாத்திரைகளை வரவழைத்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி அதை சென்னை, கோவா, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டாளிகள் மூலம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

    சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு இருக்கிறது. கைதான சிகு சைமனுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே போதை மாத்திரைகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள புதுநத்தம் ரோடு, ஆத்திக்குளம் சந்திப்பில் 2 பேர் போதை மாத்திரைகள் விற்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் 2 ஆயிரத்து 889 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போதை மாத்திரைகள் விற்றதாக ஊமச்சிக்குளம் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்த ராஜா (வயது 43), அய்யர்பங்களா விசாலாட்சி நகர் பாண்டி யன் (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    ×