மதுரையில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது

அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மதுரையில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது
Published on

மதுரை:

மதுரை மாநகரில் போதை மாத்திரை விற்கப்படுவதாக புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள், 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் அனுப்பானடி தெய்வகன்னி தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சாம் நிகேதன் (வயது 20), அண்ணா நகர் அன்னை தெரு சங்கரநாராயணன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), தென்காசி மாவட்டம் புளியரை நாயுடு தெரு, சுப்புராமன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 23) என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com