search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub inspector death"

    • மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தாமரைக்கண்ணன் பணியாற்றி வருகிறார்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த செந்தாமரைக்கண்ணன் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது59).

    உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள போலீஸ் குடியி ருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவுஇவர் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளார். அதன் பெயரில் அவர் குடும்பத்தி னர் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடி யாக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார். இவரது சொந்த ஊர் வானூர் அருகே புதுப்பாளையம் கிராம மாகும். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோபி அருகே நள்ளிரவில் விபத்து மரத்தில் மீது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு நண்பருக்கு தீவிர சிகிச்சை

    கோபி:

    கோபியை அடுத்த கெட்டி செவியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட் (வயது56). இவர் கோபி அடுத்த சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜேம்ஸ் ராபர்ட் பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் காரில் கெட்டி செவி ஊரிலிருந்து சிறுவலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ஜேம்ஸ் ராபர்ட் ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் கெட்டி செவியூர் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரேஞ்சர் மில் எதிரே உள்ள ஒரு புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ஜேம்ஸ் ராபர்ட் மற்றும் கார்த்திகேயன் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோபி போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட் இறந்து விட்டதாக தெரிவித்தார். கார்த்திகேயன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட்டுக்கு ரோசலின் என்ற மனைவியும், ஸ்டெபி இன்சென்டா என்ற மகளும் உள்ளனர்.

    ஜேம்ஸ் ராபர்ட் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கோபி போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஆர்.எஸ். தங்கமாபுரிப்பட்டணம் பெரியார் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், (வயது 48).

    இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது கோபால கிருஷ்ணன் இங்கிருந்து மாற்றுப்பணிக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவு பணி முடிந்து கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அவர், பவானி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தார்.

    இரவு சுமார் 8.40 மணி அளவில் மேட்டூர் அருகே உள்ள நவப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஈச்சர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கோபால கிருஷ்ணன் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து, மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார், சம்பந்தப்பட்ட ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து, அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (34) என்பவரை கைது செய்தனர்.

    விபத்தில் பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கூடுவாஞ்சேரி அருகே விபத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பத்ம நாபன் (வயது 72). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.

    இவர் அதே பகுதியில் காலை சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென பத்மநாபன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பத்மநாபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விபத்து ஏற்படுத்திய காரின் விபரம் தெரிய வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.

    போரூரில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    அரும்பாக்கம் ஜெய்நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பார்த்த சாரதி (வயது 55) செக்யூரிட்டி கிரைம் பிரிவு சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று போரூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் இரவு 8மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக போரூர் மார்க்கெட்டிற்கு சென்றபோது பார்த்தசாரதி தீடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் பார்த்த சாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×