என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப்-இன்ஸ்பெக்டர் பலி"

    • பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையில் சென்றபோது கார் பைக் மீது மோதியதில் படுகாயந்து உயிரிழந்தார்.
    • இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.

    திண்டுக்கல்:

    கொடைரோடு அருகே சாண்டலார்புரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.

    • 15 ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • நீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிர் நிலவி வருகிறது.

    கோவை,

    கோவை மாநகர போலீசில் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). இவர் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தது. இவர் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஊட்டி காந்தல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் தாங்க முடியாததால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    • பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேவ மூர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி மேரி ஸ்டெல்லா (வயது 50). இவர் கிருஷ்ணகிரி அடுத்த கந்திக்குப்பம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து பஸ்சில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    நேரம் ஆனதால் சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிப்பதற்காக தண்டவாளத்தை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆலப்புழையில் இருந்து தன்பாத்து வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேரி ஸ்டெல்லா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த மேரி ஸ்டெல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×