என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் மோதி பலி"
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் அடுத்த அநாகநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவரது மகள் சுஜித்ரா (வயது 27) இவர் நேற்று குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்தார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிகிதா மீது மோதியது.
- ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம்:
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது19).கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நிகிதாவுக்கு மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி கிடைத்தது. இதையடுத்து அவர் முதல் நாளான இன்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி, ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம், நாராயணன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). செங்கல்பட்டு படாளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான பார்த்தசாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது.
- உவால்டேவுக்கு கிழக்கே ரெயிலில் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உவால்டேவுக்கு கிழக்கே ரெயிலில் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் பயணம் செய்தனர் என்றும் அப்போது ரெயில் விபத்தில் சிக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆவணமற்ற புலம் பெயர்ந்தோர் ரெயிலில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூடுவாஞ்சேரி பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா.
- ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
கூடுவாஞ்சேரி பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி மார்க்கமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது இதை கவனிக்காமல் ஆதித்யா கூடுவாஞ்சேரியில் செல்போன் பேசிக் கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50).வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று காலை கழிஞ்சூரில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் தண்டவாள பகுதியில் பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- குரோம்பேட்டையில் மின்சார ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
- தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
செங்கல்பட்டை சேர்ந்தவர் பெட்ரிக் ஸ்டீபன் (வயது28). இவர் இன்று காலை குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மின்சார ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பெட்ரிக் ஸ்டீபன் எதற்காக குரோம்பேட்டை வந்தார்? என்பது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது.
- காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாபா சிந்து மண்டல் (வயது 41). இவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்வதற்காக ஹவுரா ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தார்.
அங்கிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருப்பூருக்கு பயணம் செய்தார். ரெயில் வாலாஜா ரெயில் நிலையத்தில் நின்ற போது பாபா சிந்து மண்டல் கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றவாறு சிறுநீர் கழித்தார்.
அப்போது கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று காலை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை நிற கட்டம் போட்ட லூங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாண்ட மெலோ பகுதியில் 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
- படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பார்சிலோனியா:
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பிராந்தியத்தில் கட்டலோனியா பகுதியில் உள்ள மாண்ட்மெலோ பகுதியில் நேற்று 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 பேர் பலியானார்கள்.
இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களுரு:
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர்கள் லோகேஷ் (23) கால்டாக்சி டிரைவர். பாலசுப்ரமணியம் (22), சசிகுமார் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் வேலை தேடி பெங்களூருக்கு வந்தனர்.
இவர்கள் 3 பேரும் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள சின்னப்பனஹள்ளி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் இரவு இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகத்தில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை. ரெயில் லோகா பைலட் அதிவேகமாக ரெயிலை இயக்கியதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேரும் அடுத்தடுத்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






